twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலாவின் கனவு படத்தை இயக்க தயாராகும் சசிக்குமார்...அடுத்து என்ன நடக்கும்?

    |

    சென்னை : தமிழ் சினிமாவில் தனக்கென தனி நடிப்பு ஸ்டைல் வைத்து, நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிக்கக் கூடியவர் சசிக்குமார். சசிக்குமார் படம் என்றாலே தரமாக இருக்கும் என சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமா ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர்.

    டைரக்டராக தனது சினிமா வாழ்க்கையை துவக்கிய சசிக்குமார், 2008 ம் ஆண்டு சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படத்தை தானே இயக்கி, தயாரித்து, எழுதி, நடித்தார்.

    29 வருட சினிமா பீஸ்ட்.. வைரலாகும் தளபதி விஜய்யின் செம கேஷுவல் க்ளிக்.. கொண்டாடும் ரசிகர்கள்!29 வருட சினிமா பீஸ்ட்.. வைரலாகும் தளபதி விஜய்யின் செம கேஷுவல் க்ளிக்.. கொண்டாடும் ரசிகர்கள்!

    பேச வைத்த சுப்ரமணியபுரம்

    பேச வைத்த சுப்ரமணியபுரம்

    1980 களில் மதுரையில் நடப்பது போன்ற இளம் ரெளடி கும்பலை அடிப்படையாக கொண்ட கதை இது. குறைந்த பட்ஜெட் படம் என்றாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, அனைத்து தரப்பினரையும் பேச வைத்தது. கதை, திரைக்கதை, இயக்கம், எடிட்டிங், இசை, காஸ்ட்யூம் என அனைத்தும் பேச வைத்தது.

    நடிகரான சசிக்குமார்

    நடிகரான சசிக்குமார்

    சுப்ரமணியபுரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவதாக சசிக்குமார் இயக்கிய ஈசன் படம் மிகப் பெரிய தோல்வி படமாக அமைந்தது. இதனால் டைரக்ஷனை கைவிட்டு, நடிப்பில் கவனம் செலுத்த துவக்கினார். தனது நண்பர் சமுத்திரக்கனியுடன் இணைந்து பல படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் மீண்டும் படங்களை டைரக்ட் செய்ய வேண்டும் என சசிக்குமாரை ரசிகர்கள் பிரபலங்கள் பலரும் கேட்டு வருகின்றனர்.

    மீண்டும் படம் இயக்க திட்டம்

    மீண்டும் படம் இயக்க திட்டம்

    இதனால் ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மீண்டும் படம் இயக்க சசிக்குமார் முடிவு செய்துள்ளார். அதுவும் கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பி, சர்ச்சையான குற்றப் பரம்பரை கதையை இயக்கி, டைரக்ஷனுக்கு திரும்ப சசிக்குமார் முடிவு செய்திருக்கிறாராம்.

    பாலா –பாரதிராஜா மோதல்

    பாலா –பாரதிராஜா மோதல்

    வேல ராமமூர்த்தி எழுதி குற்றப் பரம்பரை புத்தகம் 19 ம் நூற்றாண்டில் பழங்குடியினரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகம் பெரும் சர்ச்சைகளை சந்தித்தது. சில ஆண்டுகளுக்கு முன் இந்த புத்தகத்தை படமாக இயக்குவது தொடர்பாக டைரக்டர்கள் பாலா மற்றும் பாரதிராஜா இடையே மோதல் ஏற்பட்டது. இவர்களின் மிகக் கடுமையான வார்த்தைகள் கோலிவுட்டில் பெரும் புயலை கிளப்பியது.

    சர்ச்சை கதையை இயக்கும் சசிக்குமார்

    சர்ச்சை கதையை இயக்கும் சசிக்குமார்

    இருவரிடையே ஏற்பட்ட பிரச்சனை தீவிரமடைந்ததால் இருவருமே குற்றப் பரம்பரை கதையை படமாக இயக்கும் முயற்சியை கைவிட்டனர். பாலாவின் கனவு படமான குற்றப் பரம்பரை கதையை படமாக இயக்க தான் சசிக்குமார் திட்டமிட்டுள்ளாராம். அது மட்டுமல்ல இந்த படத்தில் அவரே லீட் ரோலில் நடிக்க போகிறாராம். விரைவில் இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாம்.

    இவர்கள் என்ன சொல்வார்கள்

    இவர்கள் என்ன சொல்வார்கள்

    அதே சமயம் சசிக்குமாரின் இந்த திட்டம் பற்றி பாரதிராஜா, பாலா ஆகியோர் என சொல்ல போகிறார்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும் பாலா, பாரதிராஜா இருவருக்குமே இந்த கதை ஒரு கனவு படமாகத் தான் இருந்து வருகிறது. ஆனால் சசிக்குமாருக்கு இவர்கள் இருவருடனும் நல்ல நட்பு உண்டு.

    இருவருமே நண்பர்கள்

    இருவருமே நண்பர்கள்

    பாரதிராஜா நடித்த கென்னடி கிளப் படத்தில் அவருடன் இணைந்து சசிக்குமார் நடித்துள்ளார். இதே போல் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் சசிக்குமார் லீட் ரோலில் நடித்துள்ளார். அதுமட்டுமல்ல பாலா இயக்கிய சேது படத்தில் அவருக்கு அசிஸ்டென்டாக சசிக்குமார் பணியாற்றி உள்ளார். தற்போது நடிப்பிலும் பிஸியாக இருக்கும் சசிக்குமார் கொம்பு வச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

    English summary
    Sasikumar decided to return to direction. he planned to direct, bala's dream project kuttra parambarai story. he also planned to play a lead role in this film. official announcement will come soon.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X