Sasikumar: அயோத்தி படம் ஹிட்டான சந்தோஷம்.. ஆஸ்டன் மார்ட்டின் காரை வாங்கிட்டாரா சசிகுமார்?

சென்னை: சுப்ரமணியபுரம் படத்தை இயக்கி ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவை மட்டுமல்ல இந்திய சினிமாவையே மிரட்டி எடுத்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் 4 கோடிக்கும் அதிகமான விலை கொண்ட ஆஸ்டன் மார்ட்டின் காருடன் எடுத்த போட்டோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பின் ஃபேவரைட் படம் சுப்ரமணியபுரம் என சமீபத்தில் அந்த படம் வெளியாகி 15 ஆண்டுகள் முன்னிட்டும் அனுராக் கஷ்யப் ட்வீட் போட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு வெளியான அயோத்தி திரைப்படம் சசிகுமாருக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நடிகராக கம்பேக் கொடுத்த நிலையில், அந்த சந்தோஷத்தில் ஆஸ்டன் மார்ட்டின் காரை வாங்கிட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Sasikumar poses with Aston Martin Car and fans go craze

சூப்பர் சுப்ரமணியபுரம்: 2008ம் ஆண்டு சசிகுமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் வெளியானது. 15 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னமும் அந்த படத்தை முறியடிக்கும் அளவுக்கு ஒரு கேங்ஸ்டர் படம் தமிழ் சினிமாவில் வெளியாகவே இல்லை என பல இயக்குநர்களே பாராட்டி வரும் படத்தை இயக்கிய சசிகுமார் அதன் பிறகு 2010ல் ஈசன் படத்தை இயக்கினார். ஆனால், அந்த படம் அந்தளவுக்கு ஓடவில்லை.

சுப்ரமணியபுரம் படத்திற்கு பிறகு அப்படியொரு படத்தை சசிகுமாராலே இயக்க முடியவில்லை என்பது தான் ஆச்சர்யம் கலந்த வருத்தமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து சொதப்பல்: சுப்ரமணியபுரம் படத்துக்கு பிறகு சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்த நாடோடிகள் படம் ஹிட் ஆன நிலையில், அதன் பின்னர் ஹீரோவாகவே மாறிவிட்டார் சமுத்திரகனி. ஒரு சில படங்கள் ஓடிய நிலையில், அதன் பின்னர் சமுத்திரகனி நடித்த பல படங்கள் தொடர்ந்து சொதப்பி வந்தன.

பிரம்மன், தார தப்பட்டை, கொடிவீரன், கிடாரி, அசுரவதம், கென்னடி கிளப், எனை நோக்கி பாயும் தோட்டா, நாடோடிகள் 2, எம்ஜிஆர் மகன், ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா, நான் மிருகமாய் மாற, காரி என பல படங்கள் படு தோல்வியை சந்தித்தன.

அசத்திய அயோத்தி: எத்தனை படங்கள் தோல்வி அடைந்தாலும் எப்படியாவது சாதித்து விடலாம் என தொடர்ந்து ஹீரோவாக நடித்து வந்த சசிகுமாருக்கு இந்த ஆண்டு இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான அயோத்தி படம் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட நல்ல படமாகவும் மாறியது.

மதம் எல்லாம் முக்கியமில்லை, மனிதம் தான் முதலில் முக்கியம் என்பதை வலியுறுத்தும் ஆழமான அர்த்தமான கதையில் நடித்து அசத்தி இருந்தார் சசிகுமார்.

Sasikumar poses with Aston Martin Car and fans go craze

ஆஸ்டன் மார்ட்டின் வாங்கிட்டாரா?: சுமார் 4.5 கோடி மதிப்புள்ள விலை உயர்ந்த சொகுசு காரான ஆஸ்டன் மார்ட்டின் கார் அருகே நின்று கொண்டு அசத்தல் போஸ் கொடுத்து எடுத்த புகைப்படத்தை நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சசிகுமார் Me & #AstonMartin என கேப்ஷன் கொடுத்துள்ளார்.

அதை பார்த்த ரசிகர்கள் அயோத்தி படம் ஹிட் ஆனதுமே சசிகுமார் ஆஸ்டன் மார்ட்டின் கார் வாங்கிட்டாரு பாருங்க என கமெண்ட் போட்டு வருகின்றனர். சில ரசிகர்கல் காருக்கு சொந்தக்காரர் வந்து திட்டப் போறாரு சீக்கிரம் போட்டோ எடுத்துட்டு கிளம்புங்க என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர். அமெரிக்காவின் டெக்சாஸ் நகருக்கு சென்றுள்ள சசிகுமார் அங்கே ஆஸ்டன் மார்ட்டின் கார் உடன் போஸ் கொடுத்துள்ள நிலையில், அந்த காரை அவர் வாங்கினாரா? இல்லையா? என்பது குறித்து அவர் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து சமூக அரசியல் பேசும் நந்தன் படத்தில் நடித்து வரும் சசிகுமார். மேலும், பகைவனுக்கு அருள்வாய், நா நா உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X