சசிக்குமார் படத்திற்கு இப்படி ஒரு டைட்டிலா?...கேக்கும் போதே பயமா இருக்கே
சென்னை : 'கழுகு', 'சிவப்பு' படங்களை இயக்கிய டைரக்டர் சத்யசிவா இயக்கும் புதிய படத்திற்கு 'காமன் மேன்' என டைட்டில் வைக்கப்பட்டது. செந்தூர் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

சசிக்குமார் லீட் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் ஹரிபிரியா, விக்ரந்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் பாடல்களே இல்லை என டைரக்டர் ஏற்கனவே கூறி இருந்தார்.
ஆனால் பாடல்கள் இல்லாத குறையே தெரியாத வகையில் பின்னணி இசையில் மிரட்டி இருப்பதாக சொல்லப்படுகிறது. போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் கடந்த ஆண்டே துவங்கப்பட்டதாக சொல்லப்பட்டதால் படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கொரோனா காரணமாக போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் பாதியில் நிறுத்தப்பட்டு, தற்போது தான் அது மீண்டும் துவங்கி நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டிலை மாற்றி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது செந்தூர் ஃபிலிம்ஸ்.

அந்த அறிவிப்பில், விஜய் ஆன்டனி நடித்த கோடியில் ஒருவன் படத்தின் வெற்றியை தொடர்ந்து செந்தூர் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம், சத்யசிவா இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், சசிக்குமார், ஹரி பிரியா நடிக்கும் 'காமன் மேன்' படத்தை தயாரிக்கிறது.சில சர்ச்சைகள் காரணமாக இந்த படத்தின் டைட்டில் மாற்றப்பட்டுள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறோம். 'காமன் மேன்' 'படத்தின் டைட்டில் 'நான் மிருகமாய் மாற' என மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பார்த்த ரசிகர்கள், ஏங்க டைட்டில் மாத்திட்டிங்க. அப்படி என்ன சர்ச்சை எழுந்தது. அதை பற்றி எதுமே சொல்லியே. என்னங்க இப்படி ஒரு டைட்டில் வச்சிருக்கீங்க. இதுக்கு காமன் மேன் டைட்டிலே நல்லாத் தான் இருந்தது. நான் மிருகமாய் மாற...டைட்டிலை கேட்டாலே பயமா இருக்குங்க. அதுவும் போஸ்டரில் சசிக்குமார் வேற முகம் முழுவதும் ரத்தம் வடிய நிற்கிறார். அந்த போஸ்டருடன் இந்த டைட்டிலை சேர்த்து நினைத்து பார்த்தால் படம் எப்படி இருக்குமோ என நினைத்து பார்த்தா குலை நடுங்குகிறது என கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











