சசிகுமாரின் கிடாரி பெரிய வில்லங்கமாமே? - டீசர் ரிலீஸ்

By Mayura Akilan

சென்னை: சசிகுமார் நடித்துள்ள கிடாரி படத்தின் டீசர் ரிலீஸ் ஆகியுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே 60ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர்.

வெற்றிவேல் படத்துக்குப் பிறகு சசிகுமார் தயாரித்து நடிக்கும் படத்துக்கு கிடாரி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கிடாரி படத்தை அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நாயகியாக வெற்றிவேல் நாயகி நிகிலா விமல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராஜதந்திரம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த தர்புகா சிவா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும் எஸ்.ஆர்.கதிர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

கிடாரி படம்

கிடாரி படம்

சில தினங்களுக்கு முன் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. தொடர்ந்து ஒரு பாடலும் வெளியிடப்பட்டது.
கிடாரி பாடலும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற மிகுந்த உற்சாகத்தில் உள்ளது படக்குழு. படத்தில் மொத்தம் 7 பாடல்கள். அனைத்தையும் ஏற்கனவே முடித்து கொடுத்துள்ளார், தர்புகா சிவா.

கிடாரி டீசர் ரிலீஸ்

ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் அனைத்தும் கலந்த ஜனரஞ்சக படமாம் கிடாரி. நேற்று வெளியானது. கிடாரி எப்படிப்பட்டவன் என்பதை விவரிக்கிறது இந்த டீசர்.

கிடாரி வில்லங்கமோ

கிடாரி வில்லங்கமோ

கையில் கத்தியும், கண்களில் கோபத்தோடு நிற்கிறார் சசிகுமார். கிடாரியே பெரிய வில்லங்கம் என்கிறார் ஒருவர். ஒருவேளை கத்தியும் ரத்தமுமாய் இருக்குமோ என்று ஒரு வித எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது டீசர்.

படம் ரிலீஸ் எப்போது

படம் ரிலீஸ் எப்போது

ஆகஸ்டு மாதம் இரண்டாம் தேதி கிடாரி ஆடியோ வெளியீட்டையும், செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி படத்தினை வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிடாரி அனைவரையும் கவருவானா பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X