"வாத்தியார்" ரசிகர்களே ரெடியா.. சசிக்குமாரின் எம்ஜிஆர் மகன்.. பாட்டு எப்ப ரிலீஸ் தெரியுமா?

சென்னை : இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் பாடல் மார்ச் 27ந் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கிய பொன்ராம், தற்போது இயக்கி முடித்திருக்கும் திரைப்படம் எம்.ஜி.ஆர் மகன்.

இத்திரைப்படம் ஏப்ரல் 23ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

முக்கிய நடிகர்கள்

முக்கிய நடிகர்கள்

இப்படத்தில், நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடிக்க, டப்ஸ்மேஷ் பிரபலம் மிருணாளினி கதாநாயகியாக நடித்து உள்ளார். மேலும் சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன்,சமுத்திரக்கனி, சிங்கம்புலி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மார்ச் 27 ரிலீஸ்

மார்ச் 27 ரிலீஸ்

இந்நிலையில் எம்ஜிஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இத்திரைப்படத்தின் பாடல்கள் மார்ச் 27ந் தேதி வெளியாக உள்ளதாக படங்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார்.

யூ சான்றிதழ்

யூ சான்றிதழ்

ஸ்கிரீன் சீன் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளது. வினோத் ரத்னசாமி ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு பணிகளையும், துரைராஜ் கலை இயக்குனராகவும் பணிகளை மேற்கொண்டுள்ளனர். கிராமத்து கதை அம்சம் கொண்ட இப்படத்திற்கு தணிக்கைக்குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பல படங்களை கைவசம்

பல படங்களை கைவசம்

நடிகர் சசிகுமார், நடிப்பில் 'கொம்பு வச்ச சிங்கம்டா, ராஜவம்சம், நாநா, பரமகுரு, முந்தானை முடிச்சு, பகைவனுக்கு அருள்வாய்' மற்றும் வெற்றிமாறன் தயாரிக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X