சசிகுமாரின் அடுத்த பட அறிவிப்பு - டைட்டில் வச்சாச்சு!

By Vignesh Selvaraj

சென்னை : சசிகுமாரை வைத்து 'குட்டிப்புலி' படத்தைய இயக்கிய முத்தையா இயக்கத்தில் சசிகுமார் மீண்டும் நடித்துள்ள 'கொடிவீரன்' படம் கடந்த மாதமே வெளியாகவிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படம் தள்ளிப்போனது. எனவே, இந்த மாதம் 30-ம் தேதி படத்தை வெளியிட உள்ளனர்.

வழக்கமாக சசிகுமார், ஒரு படத்தில் நடித்து முடித்ததும் சில வாரங்கள் ஓய்வெடுத்த பிறகு தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு விடுவார். 'கொடிவீரன்' படத்தை முடித்துவிட்ட நிலையில் சசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Sasikumar's next film announcement

சசிகுமார் அடுத்து நடிக்கவிருக்கும் படத்தின் டைட்டில் 'அசுரவதம்'. 'சென்னை உங்களை வரவேற்கிறது' படத்தை இயக்கிய எம்.மருதுபாண்டியன் இந்தப் படத்தை எழுதி இயக்குகிறார். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் ஸ்டுடியோ என்ற படநிறுவனம் சார்பில் திருமதி லீனா லலித்குமார் தயாரிக்கிறார்.

இதுவரை சொந்த பேனரில் நடித்து வந்த சசிகுமார் இந்தப் படத்துக்கு 4 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X