சசிகுமாரின் "பகைவனுக்கு அருள்வாய்".. பிரபலங்கள் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சென்னை : நடிகரும் இயக்குனருமான எம் சசிகுமார் இப்பொழுது பகைவனுக்கு அருள்வாய் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்து வரும் சசிகுமார் அதை தொடர்ந்து, ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி "பகைவனுக்கு அருள்வாய்" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபலங்கள் சூர்யா, ப்ரித்விராஜ் மற்றும் ராம் கோபால் வர்மா உள்ளிட்டோர் வெளியிட்டனர்.

இரண்டு கதாநாயகிகள்
ஜெய், நஸ்ரியா நடிப்பில் வெளியாகி இருந்த திருமணம் எனும் நிக்ஹா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் அனீஸ் இரண்டாவது திரைப்படத்தில் இப்பொழுது நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வர ஜோடியாக வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி என இரண்டு கதாநாயகிகள் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்து வெளியாக
சசிகுமார் ஏற்கனவே இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இதைத்தொடர்ந்து ராஜவம்சம், கொம்பு வச்ச சிங்கம்டா உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
சில நாட்களுக்கு முன்பாகவே "பகைவனுக்கு அருள்வாய்" டைட்டில் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டிருந்த நிலையில் இப்பொழுது அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா,மலையாள நடிகர் ப்ரித்விராஜ் இயக்குனர் ராம் கோபால் வர்மா உள்ளிட்டோர் தங்களது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளனர்.

மாற்றுத்திறனாளியா
போஸ்டரில் கருப்பு சட்டை கருப்பு பேண்ட் மற்றும் கருப்பு கூலர் போட்டுகொண்டு கையில் சிகெரட்டுடன் நிற்கிறார். ஒருவேள காண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியா நடிக்கிறாரோ!.

பெட்ரமாக்ஸ்
சசிகுமார், பிந்துமாதவி, வாணிபோஜன் நாசர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட நடிகர்களை தொடர்ந்து இதில் பிரபல கன்னட நடிகர் சதீஷ் நினசம் முக்கியமான வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சதீஸ் இப்போது கன்னடத்தில் உருவாகி வரும் பெட்ரமாக்ஸ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஷூட்டிங்கை முடிக்க
இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், திருமணம் எனும் நிக்ஹா பட இயக்குனர் அனீஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை கூர்கா திரைப்படத்தை தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டுடியோ "பகைவனுக்கு அருள்வாய்" திரைப்படத்தையும் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் ஷேக்ஸ்பியரின் "மேக்பேத்" லிருந்து இன்ஸ்பைராகி எடுக்கப்பட்டு வருகிறது எனவும் சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிய நிலையில் இந்த வருட இறுதிக்குள் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையில், திருமணம் எனும் நிக்ஹா பட இயக்குனர் அனீஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை கூர்கா திரைப்படத்தை தயாரித்த 4 மங்கிஸ் ஸ்டுடியோ "பகைவனுக்கு அருள்வாய்" திரைப்படத்தையும் தயாரிக்கிறது. இந்த திரைப்படம் ஷேக்ஸ்பியரின் "மேக்பேத்" லிருந்து இன்ஸ்பைராகி எடுக்கப்பட்டு வருகிறது எனவும் சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிய நிலையில் இந்த வருட இறுதிக்குள் ஷூட்டிங்கை முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











