திரையரங்குகளில் வெளியாகும் ராஜவம்சம்... சசிக்குமார் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட் ரெடி!

சென்னை : சசிக்குமாரின் உடன்பிறப்பே வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நீண்ட நாட்களாக ரிலீசுக்கு காத்திருக்கும் அவரது ராஜவம்சம் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள ராஜவம்சம் படம் வரும் 26ம் தேதி ரிலீசாக உள்ளதாக டைரக்டர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சசிக்குமார்

நடிகர் சசிக்குமார்

நடிகர் சசிக்குமார் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான உடன்பிறப்பே அவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது. ஜோதிகா, சமுத்திரக்கனியுடன் இணைந்து அவர் நடித்திருந்த இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.

உடன்பிறப்பே படம்

உடன்பிறப்பே படம்

இந்தப் படத்தில் பாசமிகு அண்ணனாக சசிக்குமார் நடித்திருந்தார். இதையடுத்து கடந்த தீபாவளியையொட்டி அவரது எம்ஜிஆர் மகன் வெளியானது. சத்யராஜ், மிருணாளினி ரவி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்திருந்த நிலையில் படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.

ராஜவம்சம் படம் ரிலீஸ்

இந்நிலையில் தற்போது அவரது அடுத்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. நீண்ட நாட்களாக கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப் போன சசிக்குமாரின் ராஜவம்சம் படம் வரும் 26ம் தேதி ரிலீசாக உள்ளதாக படத்தின் இயக்குநர் கதிர்வேலு தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

திரையரங்குகளில் ரிலீஸ்

திரையரங்குகளில் ரிலீஸ்

சசிக்குமாரின் முந்தைய படங்கள் போல இல்லாமல் ராஜவம்சம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 1ம் தேதி இந்தப் படம் ரிலீசாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது. தற்போது புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நிக்கி கல்ராணி ஜோடி

நிக்கி கல்ராணி ஜோடி

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டிடி ராஜா தயாரித்துள்ள இந்தப் படத்தில் சசிக்குமாரின் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். மேலும் ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ், யோகி பாபு, மனோபாலா, ராஜ் கபூர், ரேகா, சுமித்ரா, நிரோஷா என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

சாம் சிஎஸ் இசை

சாம் சிஎஸ் இசை

படத்திற்கு இசையமைத்துள்ளார் சாம் சிஎஸ். குடும்ப என்டர்டெயின்மெண்டாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ள நிலையில், நீண்ட கால காத்திருப்பிற்கு பிறகு தற்போது இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X