சிவகார்த்தியேன் வெளியிட்ட ராஜவம்சம் டீசர்.. வித்தியாசமான கெட்டப்பில் கெத்து காட்டும் சசிகுமார்!
சென்னை: செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது இந்த டீசரை வெளியிட்டு படக்குழு மற்றும் சசிகுமாருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். விரைவில் ராஜவம்சம் திரைக்கு வரவிருக்கிறது.

பொங்கல் ரேஸ்
கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியுள்ள ராஜவம்சம் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில பல காரணங்களுக்காக ராஜவம்சம் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. விரைவில் இந்த படம் தியேட்டருக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் ட்வீட்
ராஜவம்சம் டீசரை தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படக்குழு, சசிகுமார் மற்றும் நாயகி நிக்கி கல்ராணிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் டீசரை வெளியிட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் டீசரை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

வித்தியாசமான கெட்டப்
வழக்கமாக சசிகுமார் தனது படங்களில் ஒரே மாதிரியான ஸ்டைலிலேயே நடித்திருப்பார். ஆனால், ராஜவம்சம் டீசரில் சற்று வித்தியாசமான பியர்ட் கட்டிங்குடன் செம்ம ஹேண்ட்ஸம் ஆக சசிகுமார் ஒவ்வொரு ஃபிரேமிலும் அழகாக தெரிகிறார். திலிப் மாஸ்டர் ஆக்ஷன் காட்சிகளிலும் சசிகுமார் எதிரிகளை புரட்டும் விதம் சூப்பர்.

நிக்கி கல்ராணி
சின்ன மச்சான் செல்ல மச்சான் பாடலுக்கு ஆடிய நிக்கி கல்ராணி, சமீப காலமாக தமிழ் சினிமாவில் காணாமல் போயிருந்தார். கடைசியாக ஜீவாவின் கீ படத்தில் நாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்த படம் படு தோல்வியை சந்தித்த நிலையில், மீண்டும் சசிகுமாரின் ராஜவம்சம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்த வருகிறார் நிக்கி.

நாடோடிகள் 2
சமுத்திரகனி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள நாடோடிகள் 2 படம் நாளை திரைக்கு வருகிறது. நாடோடிகள் முதல் பாகத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டு புதிய கதையாக நாடோடிகள் 2 அரசியல், சமூக பார்வை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ளனர். இந்நிலையில், சசிகுமாரின் ரசிகர்களை உற்சாகப்படுத்த ராஜவம்சம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
டீசர் எப்படி இருக்கு?
டீசரின் ஆரம்ப காட்சியில் வெளிநாட்டை காட்டியவுடன், என்னடா இது சசிகுமார் படத்தின் டீசர் தானா? என எண்ணுவதற்குள் கிராமத்தை காட்டி விட்டனர். கிராமம், வெளிநாடு என டீசரின் ஆரம்பத்திலேயே காட்சிப் படுத்தியுள்ளது கதையின் கருவை மறைமுகமாக சொல்கிறது. சாம் சி.எஸ் இசை, திலிப் மாஸ்டர் சண்டை காட்சிகள் என அழகாகவும் ஆக்ரோஷமாகவும் செல்கிறது டீசர். கூட்டுக் குடும்பத்தின் வலிமையை குறிப்பிட்டுள்ள வசனம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











