காரசார ஆரவாரம்.. 'ஆடணும்னு முடிவு பண்ணிட்டா..' வெளியானது சசிகுமாரின் ராஜவம்சம் டிரைலர்!
சென்னை: சசிகுமார் நடித்திருக்கும் ராஜவம்சம் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது.
பிரபல இயக்குனரும் நடிகருமான சசிகுமார், ஹீரோவாக நடித்திருக்கும் படம், ராஜவம்சம். இது அவருக்கு 19-வது படம். இதில், சசிகுமார் ஜோடியாக, நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

தம்பி ராமையா
இவர்களுடன் ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ், மனோபாலா, ரமேஷ்கண்ணா, சிங்கம்புலி, யோகி பாபு, கும்கி' அஸ்வின், ராஜ் கபூர், நமோ நாராயணன், சாம்ஸ், நிரோஷா உட்பட பலர் நடித்துள்ளனர். கே.வி.கதிர்வேலு இயக்கி இருக்கிறார். இவர், டைரக்டர் சுந்தர் சி.யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

கூட்டு குடும்பம்
செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கிறார். கூட்டு குடும்பத்தின் மேன்மையை சொல்லும் படமாக இது உருவாகி இருக்கிறது. சாம் சிஎஸ் இசை அமைத்துள்ளார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்துக்கு சென்சார், யு சான்றிதழ் வழங்கி இருக்கிறது.

காரசார ஆரவாரம்
இந்தப் படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. டிரைலரில் மெகா குடும்பத்தில் இருக்கும் சசிகுமார், கூட்டுக் குடும்பத்தை உயர்த்தி வசனம் பேசுகிறார். இயற்கையை பாதுகாப்பது, குடும்ப உறவுகள் பற்றிய வசனம் இடம்பெறுகிறது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுக்கும் இருக்கிறது. காரசார ஆரவாரமாக இருக்கிறது, டிரைலர்.

உழைப்பு, உழைப்பு
இதில், நிறைய பன்ச் வசனங்களும் இடம்பெறுகின்றன. ஐடி, சினிமா, அரசியல்னு எந்த ஃபீல்டுக்கும் பேஸ் ஒண்ணுதான், உழைப்பு, உழைப்பு. ஆடணும்னு முடிவு பண்ணிட்டா, அடிச்சு ஆடணும், இல்லைன்னா அடிபட்டே சாகணும்' என மிரட்டலாக பேசுகிறார் சசிகுமார்.
இந்த டிரைலரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











