நீ என்ன காந்தியா? அவர்களை மிஸ் யூஸ் பண்ண விரும்பல.. ஹிட் கொடுக்கும் சசிகுமாரின் மனக் குமுறல்கள்!

சென்னை: நடிகர் சசிகுமார் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் ஃப்ரீடம். அறிமுக இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் லிஜிமோல் ஜோஸ், ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்தின் டிரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தார்கள். அதில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சசிகுமார் அளித்த பதில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சசிகுமார் அடுத்தது வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது சம்பளத்தை உயர்த்துவாரா என்ற கேள்வி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றி விழாவில் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் அளிக்கும்போது, சம்பளத்தை எல்லாம் உயர்த்த மாட்டேன் எனக் கூறினார்.சசிகுமார் அப்படி கூறியது பலரது கவனத்தை ஈர்த்தது. ஆனால் அதன் பின்னர் சசிகுமாரைத் தொடர்பு கொண்ட பலரும் அவரை செல்லமாக கடிந்துள்ளார்கள். அதாவது, " நீ என்ன பெரிய காந்தியா? நீ என்ன தியாகியா? நீ எதுக்கு விட்டுக் கொடுக்குற? எவ்வளவுக்கு எவ்வளவு பாராட்டுகள் வருகிறதோ, அதே அளவுக்கு திட்டுகளும் விழுகிறது. நீ பாட்டுக்கு சொல்லீட்டு வந்துட்ட, நீ என்ன பெரிய இவனா, அவனா என்று எல்லாம் கேட்கிறார்கள்.

வட்டி கேட்கிறார்கள்: டூரிஸ்ட் ஃபேமிலி வெற்றி அடைந்ததால் நான் அதிக லாபம் பார்த்துவிட்டேன் என்று நினைத்துக் கொண்ட சிலர்கள், எனக்கு போன் போட்டு, நான் வாங்கிய பணத்திற்கு வட்டி கேட்டுக் கொண்டு உள்ளார்கள். அதுவும் திரைத்துறையில் இருப்பவர்களே கேட்கிறார்கள். ஆனால் படத்தின் வசூல், லாபம் எல்லாம் தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் நிறுவனத்திற்குத்தான் அந்த டாலர் எல்லாம் போய்விட்டது" எனக் நகைச்சுவையாகப் பகிர்ந்து கொண்டார்.

Sasikumar Speech At Freedom Movie Press Meet Salary Hike And Grand Promotions Goes Trending
Photo Credit:

மிஸ் யூஸ்: கல்லூரிகளில் வேண்டாம்: அதேபோல் உங்கள் படங்கள் பிரமாண்டமான வெற்றிகளைக் குவிக்கிறது, நீங்கள் நேரு ஸ்டேடியம் போன்ற இடங்களில் படத்தின் இசை வெளியீட்டு விழாக்களை செய்யலாமே என்ற கேள்விக்கு மிகவும் பாராட்டத் தகுந்த பதிலையும் தனது நிலைப்பாட்டையும் கூறினார். அதாவது, " அவ்வளவு பிரம்மாண்டம் எல்லாம் தேவையற்றது என நான் நினைக்கிறேன். இதற்கு முந்தைய படங்களில் கூட இசை வெளியீட்டு விழாவை கல்லூரியில் நடந்தலாம். மாணவர்களை திரட்டி பிரமாண்டமாக நடத்தலாம் என்று கூறினார்கள்.


தப்பித்து விட்டேன்: ஆனால் நான் தான் வேண்டாம் எனக் கூறி தடுத்து வருகிறேன். படிக்கும் இடத்தை நமது படத்தை விளம்பரப்படுத்தும் இடமாக மாற்ற வேண்டாம் எனத் தோன்றியது. அந்த மாணவர்களை மிஸ் யூஸ் பண்ண வேண்டாம் என்று தோன்றியது. நந்தன் மற்றும் டூரிஸ்ட் ஃபேமிலி படங்களின் தயாரிப்பாளர்களிடம் தப்பித்து விட்டேன். இவர்களிடமும் தப்பித்து விட்டேன். ஒருவேளை எதிர்காலத்தில் தயாரிப்பாளர்களின் உந்துதலால் எனது படங்களின் புரோமோஷன்கள் அங்கு நடக்கலாம். ஆனால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை" எனக் கூறினார். சசிகுமாரின் இந்த பேச்சும் பதிலும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X