நந்தன் படத்தின் வெற்றி.. இது ஒன்று போதும்.. ஆஸ்கார் வாங்கியதற்கு சமம்.. சசிகுமார் பேச்சு!
சென்னை: பத்திரிகையாளராக இருந்து இயக்குநராக மாறிய நந்தன் பட இயக்குனர் சரவணன், 'சங்காரம்' புத்தகத்தை எழுதி உள்ளார். இதன் நூல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நக்கீரன் கோபால், நடிகர் சூரி, சசிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். அறிமுக விழாவில் சசிக்குமார் கலந்து கொண்டு பேசினார்.
அதில், நந்தன் திரைப்படத்தில் நான் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடிப்பதற்கு சென்றேன். அப்போது, ஏற்கனவே கமிட் செய்திருந்த ஹீரோவிற்கும் இயக்குநருக்கும் ஏதோ பிரச்சனை என்பதால், படப்பிடிப்பு நின்று விட்டது. அந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் சரவணன் இருந்தார். அப்போது நான், இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறேன் என்று சென்னோன். ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு நான் சரியாக இருப்பேனா என்ற குழப்பம் இருந்தது. உடனே எனக்கு ஒரு வாரம் மட்டும் டைம் கொடுங்க, அந்த கதாபாத்திரத்திற்கு நான் தயாராகி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு, அந்த ஏழு நாட்களுக்குள் என் நிறத்தை மாற்றிக்கொண்டு நந்தன் கதாபாத்திரத்திற்கு தயாராகி நடித்த திரைப்படம் தான் நந்தன்.

ஆஸ்கருக்கு சமம்: படம் எடுத்து முடிந்த பிறகும் படம் வெளியிடுவதில் பல பிரச்சனைகள் இருந்தது. எப்படியோ, அனைவரும் சேர்ந்து படத்தை வெளியிட்டோம். அந்த படம் எனக்கு ஒரு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. இன்றும் நந்தன் படம் என்ன செய்கிறது என்றால், ஆகஸ்ட் 15-ந் தேதி கொடி ஏற்ற முடியாமல் தவித்த தலித் பஞ்சாயத்துக்கு தலைவர்கள் அனைவரும் கொடி ஏற்றுவதை ஆன்லைனில் பார்க்க வேண்டும் என ஒரு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதை ஒருவர் ஃபோன் செய்து கண்ணீருடன் என்னிடம் சொன்னார். இதைக்கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். காசு பணமும் கொடுக்காத சந்தோஷத்தை அந்த கண்ணீர் எனக்கு கொடுத்தது. அது ஆஸ்கார் விருதுக்கு சமம். அதை நான் இந்த படத்தின் மூலம் பெற்றுவிட்டேன். ஒரு படம் என்ன செய்ய வேண்டுமோ அதை நந்தன் படம் செய்து காட்டியது. சரவணன் எப்போதுமே வியாபார ரீதியாக எந்த திரைப்படத்தையும் எடுக்க மாட்டார். ஜூனியர் விகடன் பத்திரிக்கையில் பல சமூகம் பல விஷயங்களை எழுதி வந்ததால் இப்பொழுதும் அப்படித்தான் படம் எடுகிறார். தற்போது அவர் சங்காரம் என்ற புத்தகத்தை எழுதி இருக்கிறார். இதைபடமாக எடுத்தால் மிகவும் அருமையாக இருக்கும் என்று சசிக்குமார் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











