சசிகுமார் செஞ்ச தரமான சம்பவம்.. சுப்ரமணியபுரம் ரிலீசாகி 13 வருஷம் ஆகிடுச்சு.. நன்றி சொன்ன சசி!

சென்னை: தமிழ் சினிமாவின் தரமான கல்ட் படமாக எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நீங்காமல் நிலைத்து இருக்கிறது சுப்ரமணியபுரம்.

13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூலை 4ம் தேதி பயங்கர சந்தோஷமும் டென்ஷன் உடன் கலந்து சுப்ரமணியபுரம் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருந்தார் சசிகுமார்.

13 ஆண்டுகள் நிறைவடைந்த சந்தோஷத்தை ரசிகர்கள் மற்றும் அந்த படத்திற்காக உழைத்த கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் இயக்குநர் சசி குமார்.

சுப்ரமணியபுரம்

சுப்ரமணியபுரம்

இயக்குநர் சசிகுமாரின் அறிமுக இயக்கத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 4ம் தேதி வெளியான படம் சுப்ரமணியபுரம். ஜெய், சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, சுவாதி நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் படம் தரமான மதுரை சம்பவம் படமாக தமிழ் சினிமாவில் தடம் பதித்தது.

கண்கள் இரண்டால்

கண்கள் இரண்டால்

அதிரடி சம்பவங்கள் நிறைந்த சுப்ரமணியபுரம் படத்தில் அழகான ஜெய் - சுவாதியின் காதல் கதை அனைத்து விதமான ரசிகர்களையும் அந்த படத்தை பார்க்க வைத்தது. ஜேம்ஸ் வசந்தன் இசையில் வெளியான கண்கள் இரண்டால் உள்ளிட்ட அத்தனை பாடல்களும் வேற லெவல் ஹிட்.

பாலிவுட் இயக்குநருக்கே இன்ஸ்பிரேஷன்

பாலிவுட் இயக்குநருக்கே இன்ஸ்பிரேஷன்

இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்புக்கு இந்த படம் தான் பயங்கர இன்ஸ்பிரேஷன் என்றும், அவர் இயக்கிய சூப்பர் ஹிட் படமான கேங்ஸ் ஆஃப் வாசிப்பர் படத்துக்கு இந்த படம் தான் இன்ஸ்பிரேஷன் என பல இடங்களில் அவர் கூறியுள்ளார்.

சசிகுமார் நன்றி

சசிகுமார் நன்றி

13 ஆண்டுகளை சுப்ரமணியபுரம் படம் நிறைவு செய்த நிலையில், நடிகரும் இயக்குநருமான சசிகுமார், ரசிகர்களுக்கும் அந்த படத்திற்காக பாடுபட்ட அத்தனை கலைஞர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். சுப்ரமணியபுரம் போல இன்னொரு தரமான சம்பவத்தை சசிகுமார் இயக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X