நல்லவராக வல்லவராக இவ்வளவு செய்தவரின் இடத்தை எப்படி ஈடு செய்ய முடியும்? பிரபலங்கள் உருக்கம்!

சென்னை: நடிகர் விவேக்கின் மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் உருக்கமாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

நடிகர் விவேக் பற்றி அறியாத சில உண்மைகள் | RIP Vivek, Vivek Biography

மாரடைப்பால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை காலமானார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனிக்காமல் விவேக்கின் உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நேரில் சென்றும் விவேக்கின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல பிரபலங்கள் சமூக வலைதளங்களிலும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

எப்படி ஈடு செய்ய முடியும்?

எப்படி ஈடு செய்ய முடியும்?

நடிகர் சசிகுமார் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், லட்சக்கணக்கான மரங்களை நட்டவர். கலாம் ஐயா வழிநின்று சுற்றுச்சூழலைக் காத்தவர். டெங்கு தொடங்கி கொரோனா வரை மக்களின் விழிப்புணர்வுக்கு பெரும் பங்காற்றியவர். நடிப்பையும் தாண்டி நல்லவராக வல்லவராக இவ்வளவு செய்தவரின் இடத்தை எப்படி ஈடு செய்ய முடியும்? கண்ணீர் அஞ்சலி விவேக் சார்.. என பதிவிட்டுள்ளார்.

நம்ப முடியவில்லை

நடிகர் கவுதம் கார்த்திக் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், இதை நம்ப முடியவில்லை... அவர் நம்மை சிரிக்க வைத்தார், அவர் தனது நடிப்பின் மூலம் நமக்கு கல்வி கற்பித்தார், இந்த உலகத்தை கவனித்துக்கொண்டார். அதை எவ்வாறு கவனித்துக்கொள்வது என்பதைக் கற்பிக்க உதவினார். உங்களைப் போல இன்னொருவர் இருக்க மாட்டார் சார். நாங்கள் உங்களை மிஸ் பண்ணுவோம்.. ஆன்மா சாந்தியடையட்டும் விவேக் சார்.. இவ்வாறு பதிவிட்டுள்ளார்

காரணமாக இருந்தீர்கள்

நடிகர் விக்ரம் பிரபு பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், பல புன்னகைகளுக்கும் சிரிப்பிற்கும் நீங்கள் காரணமாக இருந்தீர்கள். ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர், அற்புதமான நடிகர் மற்றும் சமூக உணர்வுள்ள குடிமகன். நீங்கள் இனி இல்லை என்று நினைப்பது தாங்க முடியாதது. உங்கள் ரசிகர்களில் ஒருவராக உங்களை மிஸ் பண்ணுவேன் விவேக் சார் என பதிவிட்டுள்ளார்.

பெரிய இழப்பு

தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், திரைப்பட தொழில் மற்றும் தமிழ்நாட்டிற்கு ஒரு பெரிய இழப்பு. நீங்கள் எங்களுக்கு வழங்கிய மில்லியன் கணக்கான சிரிப்பினாலும், உங்களால் நடப்பட்ட மரங்களினாலும் நீங்கள் என்றென்றும் நினைவுகூறப்படுவீர்கள் !! அமைதியாக இளைப்பாருங்கள் விவேக் சார் என பதிவிட்டுள்ளார்.

நதியா

நடிகை நதியா பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், மிகவும் வருத்தமளிக்கும் மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி. உங்கள் புத்திசாலித்தனத்தையும் நகைச்சுவையையும் எப்போதும் போற்றுகிறேன். உங்கள் குடும்பத்திற்கு மனமார்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

இதயமே நொறுங்குகிறது

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், அய்யோ கடவுளே.. லெஜண்ட்ரி நடிகர் விவேக் குறித்த இப்படியான அதிர்ச்சி செய்தியோடு நான் எழுவேன் என்று நம்பவில்லை, இதயமே நொறுங்குகிறது.. ஒரு சமூக செய்தியை எப்போதும் தனது நகைச்சுவையில் இணைத்த நீங்கள் எங்கள் காலத்தின் சிறந்த நகைச்சுவை நடிகர்.. நான் எப்போதும் உங்களின் தீவிர ரசிகன்.. நீங்கள் எப்போதும் எங்கள் இதயத்தில் வாழ்வீர்கள்.. என பதிவிட்டுள்ளார்.

விதைத்த சிந்தனைகள்

நடிகர் சூர்யா பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், மனதில் விதைத்த சிந்தனைகள் வழியாக தலைமுறைக்கும் எங்கள் நினைவில் வாழ்வீர்கள் விவேக் சார்.. மீள முடியாத துயரத்தில் தவிக்கும் குடும்பத்தாருடன் துணை நிற்போம்.. என பதிவிட்டுள்ளார்.

சிரப்புச்சாரல் வீசும்

பாடலாசிரியர் விவேகா பதிவிட்டுள்ள ட்வீ ட்டில்,
சனங்களின்
கலைஞன்
மரங்களின்
காதலன்
திரையரங்கில்
சிரிப்புச்சாரல் வீசும்
தீராநதி
சமூக நேசன்
திரு.விவேக் அவர்களின் மறைவு
கலைத்துறைக்குப்
பேரிழப்பு
ஆழ்ந்த இரங்கல்.. என பதிவிட்டூள்ளார்.

நினைக்கவே முடியவில்லை

நடிகர் விஷால் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், விவேக் சார் நம்முடன் இல்லை என்பதை நினைக்கவே முடியவில்லை. உண்மையான பசுமை போராளி.. நம்மில் பலருக்கும் உத்வேகம்.. ஆர்.ஐ .பி என பதிவிட்டுள்ளார்.

தவற விட்டுவிட்டேன்

நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், நாங்கள் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளோம்.. உங்களுடன் திரை இடத்தைப் பகிர்வதை நான் தவற விட்டுவிட்டேன், உங்களைப் போன்ற ஒரு லெஜண்ட்டிடமிருந்து இவ்வளவு கற்றலைத் தவற விட்டுவிட்டேன்.. உங்களை எப்போதும் மிஸ் பண்ணுவேன் சார்.. குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

சீக்கிரம் போய்டீங்க சார்

இயக்குநர் வெங்கட் பிரபு பதிவிட்டுள்ள ட்வீ ட்டில், ரொம்ப சீக்கிம் போய்டீங்க சார்.. வாழ்க்கை உண்மையிலேயே நியாயமற்றது.. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: vivek
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X