சசிகுமாரின் ‘ஃப்ரீடம்’ 2வது சிங்கிள் எப்படி? வைக்கம் விஜயலட்சுமி குரலில் கலங்க வைக்கும் பாடல்!
சென்னை: இயக்குனரும் நடிகருமான சசிகுமார் நடித்து ஃப்ரீடம் திரைப்படம் ஜூலை 10ஆம் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில், திரைப்படத்தின் 2வது சிங்கிள் பாடல் வெளியாகி உள்ளது. இப்படத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோசும் இலங்கை அகதிகளாக நடித்துள்ளனர்.
சசிகுமார் நடித்த சுப்புரமணிய புரம், நாடோடிகள், சுந்தரபாண்டி என ஒவ்வொரு கதையும் வித்தியாசமானதாக இருக்கும். அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து வந்த சசிகுமாரின் படங்கள் திடீரென தோல்வியைத் தழுவியதால் சில ஆண்டுகள் இவர் படத்தில் நடிக்காமலும் இயக்காமலும் இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு இவரின் நடிப்பில் கருடன், அயோத்தி படங்கள் வெளியாகின. அதன் பின், 'டூரிஸ்ட் ஃபேமிலி' தர்மதாசாக சகிக்குமார் நடித்திருந்தார். இந்த படம், அதிக வசூலை அள்ளித் திரைப்படங்களின் வரிசையில் இணைந்தது. அபிசன் ஜீவிந்த் இயக்கிய இப்படத்தில் சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், திலக், பகபதி பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர்.

ஃப்ரீடம்: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை தொடர்ந்து ஃப்ரீடம் படம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தில் இலங்கை அகதியாக நடித்திருக்கிறார் சசிகுமார். 90 காலகட்டத்தில் நடந்த ஜெயில் உடைப்பு சம்பவத்தை அடிப்படையாக வைத்து இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையில் வந்தவர்கள் என்பதற்காக தவறே செய்யாமல் சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட சசிகுமார் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசரின் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களிடையே கவனம் பெற்று யூடியூபில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
2வது சிங்கிள்: 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் சசிக்குமார் இலங்கை தமிழக நடித்துள்ளார். சசிகுமாருடன் லிஜோமோல் ஜோஸ், சுதேவ் நாயர், ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் திரைப்படத்திலிருந்து 2வது பாடலான 'ஆராரோ ஆரிராரோ' பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அந்த பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாட ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த பாடல் இணையத்தில் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது. சசிகுமாரின் அடுத்த வெற்றித்திரைப்படமாக இப்படம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











