Freedom: சசிகுமாருக்கு அடுத்த வெற்றி கன்பார்ம்.. இணையத்தில் டிரெண்டாகும் ‘Freedom‘ டீசர்!

சென்னை: நடிகர் சசிகுமார் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சசிகுமார் நடிப்பில் ரசிகர்களை கவர்ந்த படமாக 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் இருந்தது. இப்படத்தை தொடர்ந்து சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் உள்ளிட்டோர் நடிப்பில் Freedom படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.

நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கக்கூடியவர் தான் நடிகர் சசிகுமார். இவர் நடித்த சுப்புரமணிய புரம், நாடோடிகள், சுந்தரபாண்டி என ஒவ்வொரு கதையும் வித்தியாசமானதாக இருக்கும். அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து வந்த சசிகுமாரின் படங்கள் திடீரென தோல்வியைத் தழுவியது. இதனால், சில ஆண்டுகள் இவர் நடித்த படங்கள் வெளியாகாமல் இருந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு அயோத்தி திரைப்படம் சத்தமே இல்லாமல் வெளியானது. மனித நேயத்தின் மீதும் அழுத்தமான நம்பிக்கையை விதைக்கும் வகையில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் கதையை அடிப்படையாகக் கொண்டு அயோத்தி படம் வெளியானது. அப்படத்தின் கதை ஓட்டம் மனதை வருடுவதாக இருந்தது. தியேட்டரில் வெளியான அயோத்தி படம் பெரும்பாலானவர்களை சென்று சேரவில்லை. ஆனால், படம் ஓடிடியில் வெளியான போது, பலரும் அயோத்தி படத்தை பாராட்டினார்கள்.

tourist family Freedom Sasikumar
Photo Credit:

சசிகுமார்: அயோத்தி திரைப்படத்தை தொடர்ந்து இந்த ஆண்டு வெளியானத் திரைப்படம், 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இத்திரைப்படம் இந்த ஆண்டு அதிக வசூலை அள்ளித்திரைப்படங்களின் வரிசையில் இந்த படம் இணைந்தது. அபிசன் ஜீவிந்த் இயக்கிய இப்படத்தில் சிம்ரன், எம்.எஸ்.பாஸ்கர், திலக், பகபதி பெருமாள் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் சசிகுமார் தர்மதாசாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். யாராக இருந்தாலும், அன்பாக இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற கருத்தை இத்திரைப்படம் சொல்லி இருந்தது. இப்படத்தை பலரும் பாராட்டினார்கள். இந்த படத்தை தொடர்ந்து சசிகுமார் நடித்துள்ள படம் Freedom. இதில், சசிகுமாருடன் லிஜோமோல் ஜோஸ், சுதேவ் நாயர், ரமேஷ் கண்ணா, போஸ் வெங்கட் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'கழுகு' படத்தை இயக்கிய சத்யசிவா இந்த படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

அடுத்த வெற்றிப்படம்: Freedom திரைப்படம் ஜூலை 10ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ள இப்படத்தின் டீசரை படக்குழு அண்மையில் வெளியிட்டது. இப்படத்தில் சசிகுமார் மீண்டும் இலங்கை தமிழராக நடித்துள்ளார். 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் இலங்கையில் தப்பித்து வாழ்க்கை தொடங்கியவர்களின் நல்ல பக்கத்தை காட்டியாது. ஆனால், Freedom திரைப்படம் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகள் சந்திக்கும் வலிகளையும், வேதனையையும் அப்பட்டமாக காட்டும் படமாக இப்படம் இருக்கும் என்பது டிரைலரில் உள்ள காட்சிகளின் மூலம் தெரிகிறது. மேலும், இலங்கையில் வந்தவர்கள் என்பதற்காக தவறே செய்யாமல் சிறைச்சாலையில் சிக்கிக்கொண்ட சசிகுமார் தப்பித்து செல்வதுப் போன்ற கதைக்களத்தில் இப்படம் அமைந்துள்ளது. மேலும், "உங்க விடுதலையை எவனாலும் தடுக்க முடியாது" என்ற வசனமும் இடம் பெற்றுள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சசிகுமாரின் அடுத்த வெற்றித்திரைப்படமாக இப்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: tourist family freedom sasikumar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X