சசிக்குமாரின் 'மை லார்ட்‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னை: சசிகுமார் நடித்துள்ள 'மை லார்ட்' திரைப்படம் படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜுமுருகன் இயக்கத்தில் எம்.எஸ்.எஸ். புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.எஸ். முரளி தயாரித்துள்ள இப்படம். ஒரு சமூக நாடகமாக உருவாகி, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

சுப்பிரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சசிக்குமாரின் நடிப்பில் கடந்த ஆண்டு கருடன், டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது.
சசிகுமார் நடிப்பில் கடைசியாக சமுத்திரக்கனி, ஸ்ருதி பெரியசாமி நடிப்பில் 'நந்தன்' படம் வெளியானது. இப்படத்தில், வில்லனாக பாலாஜி சக்திவேல் நடித்திருந்தார். பட்டியலின மக்கள் ஊராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும்போது சந்திக்கும் சிக்கல்களை அழுத்தமான காட்சிகளுடனும், அரசியல் வசனங்களுடனும் சொல்லிய இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Sasikumar movie
Photo Credit: Olympia movies

மை லார்ட் திரைப்படம்: அந்த படத்தை தொடர்ந்து சசிக்குமார் நடிப்பில் 'மை லார்ட்' திரைப்படம் 13ந் தேதி வெளியாக உள்ளது. ஜோக்கர்,குக்கூ, ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இப்படத்தை இயக்கி உள்ளார். சசிக்குமாருக்கு ஜோடியாக கன்னட நடிகை சைத்ரா ஜே. ஆச்சார் நடித்துள்ளார். மேலும், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம், ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

மாநில அளவில் நிலவும் ஒரு முக்கிய சமூகப் பிரச்சினையை நீதிமன்ற விசாரணைகள் மூலம் எடுத்துரைக்கும் விதமாக இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வலுவான சமூக கருத்து, அழுத்தம் திருத்தமாக செல்லப்பட்டுள்ளது. இப்படத்தில் சசிகுமார் முதல்முறையாக வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X