சசிக்குமாரின் நந்தன்.. யப்பா வேற லெவல்.. படத்தை கொண்டாடும் மக்கள்.. படக்குழு நெகிழ்ச்சி

சென்னை: சசிக்குமார் கோலிவுட்டின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர். இரண்டு படங்கள் மட்டுமே அவர் இயக்கியிருந்தாலும் அந்த இரண்டு படங்களும் இன்றுவரை கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதிலும் சுப்ரமணியபுரம் திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் அந்த இரண்டு படங்களுக்கு பிறகு சசிக்குமார் படங்கள் இயக்கவில்லை. மாறாக நடிப்பில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். அவரது நடிப்பில் நாளை நந்தன் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

இயக்குநர்கள் பாலா மற்றும் அமீரிடம் உதவி இயக்குநராக இருந்தவர் சசிக்குமார். சேது, பிதாமகன் உள்ளிட்ட படங்களில் பணியாற்றிவிட்டு தனியாக படம் இயக்க திட்டமிட்டு கதையை உருவாக்கி சாந்தனுவிடம் கூறினார். ஆனால் அதில் அவர் நடிக்க விரும்பவில்லை. அதேபோல் படத்தை தயாரிக்கவும் எந்த கம்பெனியும் முன்வரவில்லை. இதனையடுத்து ஜெய்யிடம் கதை சொல்லி ஓகே ஆனதை அடுத்து சுப்ரமணியபுரம் திரைப்படம் முதல் படியை தாண்டியது.

sasikumar nandhan

ஆனால் யாரும் தயாரிக்க முன் வராததால் சசிக்குமாரே படத்தையும் தயாரித்தார். ஜெய்,சசிக்குமார், சமுத்திரக்கனி, கஞ்சா கருப்பு, ஸ்வாதி உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்திருந்தார். கடந்த 2008ஆம் ஆண்டு இந்தத் திரைப்படமானது வெளியானது.

மெகா ஹிட்டான சுப்ரமணியபுரம்: மதுரையை மையமாக வைத்தும், அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் சுயநலத்துக்காக பலியாகும் இளைஞர்களை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. படத்தின் போஸ்டரை பார்த்து கிண்டல் செய்தவர்கள் எல்லாம் படத்தை பார்த்து வாயடைத்துப்போனார்கள். அந்த அளவுக்கு சசிக்குமாரின் மேக்கிங் அட்டகாசமாக இருந்தது. சிறப்பான எமோஷனல், சண்டைக்காட்சிகள், காதல் காட்சிகள், வசனங்கள், பாடல்கள் என பக்கா பேக்கேஜாக அமைந்தது சுப்ரமணியபுரம் திரைப்படம்.

ஈசனோடு ஒதுங்கிய சசிக்குமார்: முதல் படமே மெகா ஹிட் கொடுத்த இயக்குநர் என்ற பெயரை எடுத்த சசிக்குமார் அடுத்ததாக ஈசன் படத்தை இயக்கினார். அந்தப் படம் ஓரளவு நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால் அந்தப் படத்தோடு இயக்கத்திலிருந்து ஒதுங்கிவிட்டார் சசிக்குமார். அதன் பிறகு ஹீரோவாக நடிப்பதில் கவனம் செலுத்திவரும் அவர் கடைசியாக அயோத்தி படத்தில் நடித்தார். மந்திரமூர்த்தி இயக்கியிருந்த அயோத்தி நல்ல வரவேற்பைப் பெற்றது. இருந்தாலும் சசிக்குமார் மீண்டும் இயக்க வர வேண்டும் என ரசிகர்கள் நீண்ட வருடங்களாகவே கோரிக்கை வைத்துவருகின்றனர்.

நந்தன்: சூழல் இப்படி இருக்க அவர் இப்போது இரா.சரவணன் இயக்கத்தில் நந்தன் படத்தில் நடித்திருக்கிறார். சரவணன் ஏற்கனவே கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். எனவே இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு பிறந்திருக்கிறது. படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். சசிக்குமாருடன் சமுத்திரகனி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். படமானது நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

செம ப்ரோமோஷன்: இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் வீடியோவை வெளியிட்டிருக்கிறது படக்குழு. பொதுவாக ஒரு படக்குழு தங்களது படத்தின் ப்ரோமோஷனுக்கு செலிபிரிட்டிகளை பிடிப்பார்கள். இந்த ப்ரோமோஷன் வீடியோவில் முதலில் சீமான், மிஷ்கின் உள்ளிட்டோரிடம் படக்குழு ப்ரோமோஷன் பற்றி பேசுவது போன்ற காட்சிகள் இடம்பெறுகின்றன. பிறகு மக்களிடம் நேரடியாக சென்று அவர்களை படம் பார்க்க அழைப்பது போன்றும்; மக்களும் படத்தை பார்த்துவிட்டு பாராட்டுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றன. மக்களும் படத்தை வெகுவாகவே பாராட்டியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X