twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    “சசிலலிதா”.. ஜெ.வோடு சசி வாழ்க்கையையும் படமாக்கும் பிரபல இயக்குநர்.. பர்ஸ்ட் லுக்கே சும்மா அதிருதே!

    சசிலலிதா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    |

    சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகும் சசிலலிதா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

    மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க பலரும் போட்டி போட்டு வருகின்றனர். ஏற்கனவே, நித்யாமேனனை வைத்து தி அயர்ன் லேடி என்ற பெயரில் பிரியதர்ஷினியும், கங்கணா ரணாவத்தை வைத்து தலைவி என்ற பெயரில் இயக்குநர் விஜய்யும் பட வேலைகளை ஆரம்பித்து விட்டனர்.

    இது ஒருபுறம் இருக்க, ஜெயலலிதாவின் தோழியாக சசிகலாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க போவதாக சர்ச்சைகளுக்குப் பேர் போன ராம்கோபால் வர்மாவும் களத்தில் உள்ளார்.

    ஜெயலலிதாவாக நடிக்க மறுத்த தல ஹீரோயின்: இதெல்லாம் ஒரு காரணமா? ஜெயலலிதாவாக நடிக்க மறுத்த தல ஹீரோயின்: இதெல்லாம் ஒரு காரணமா?

    சசிலலிதா பர்ஸ்ட் லுக்:

    சசிலலிதா பர்ஸ்ட் லுக்:

    இந்நிலையில், ஜெயலலிதா மற்றும் சசிகலா இருவரின் வாழ்க்கை வரலாற்றையும் சேர்த்து, ‘சசிலலிதா' என்ற பெயரில் புதிய படம் உருவாகி வருகிறது. ஜெயம் மூவில் தயாரிக்க, ஜெகதீஸ்வர ரெட்டி என்பவர் இயக்கும் இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' நேற்று வெளியிடப்பட்டது.

    கோபமும், சிரிப்பும்:

    கோபமும், சிரிப்பும்:

    இதில், சசிகலா மற்றும் ஜெயலலிதா இருவரின் முகமும் பாதி பாதியாக சேர்ந்து ஒரு புகைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் முகம் சிரித்தபடியும், சசிகலாவின் முகம் கோபமாக இருக்கும்படியும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளது.

    அப்பல்லோ நாட்கள்:

    அப்பல்லோ நாட்கள்:

    இரண்டு பாகமாக உருவாகும் இப்படத்தில் ஜெயலலிதாவின் பால்யம், கல்வி, நடிகையான கதை, அரசியல் பிரவேசம் என அவரது வாழ்க்கையில் நடந்த அனைத்து சம்பவங்களும் இருக்கிறதாம். அதோடு, இப்படத்தில் 75 நாள் மருத்துவமனை அனுமதி, அவரது மரணம் பற்றிய மர்மங்களும் பற்றியும் பேசப்படும் என்கிறது படக்குழு.

    எதிர்பார்ப்பு:

    எதிர்பார்ப்பு:

    இப்படத்தின் இயக்குநர் ஜெகதீஸ்வர ரெட்டி, ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர். அவரது வாழ்க்கையை மிக அருகில் இருந்து பார்த்தவர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவர் இவர். அதனால், இப்படம் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மேலும் தெளிவாக காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனது கடமை:

    எனது கடமை:

    தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் இயக்குநர் ஜெகதீஸ்வர ரெட்டி, ஜெயம் மூவிஸ் என்ற பெயரில் அனைத்து மொழிகளிலும் பல படங்கள் தயாரித்திருக்கிறார். ஜெயலலிதா மீது கொண்ட அன்பினால் அவரின் வாழ்க்கையை படமாக எடுக்கப் போவதாகக் கூறும் ஜெகதீஸ்வர ரெட்டி, இது தனது கடமை என்கிறார்.

    விரைவில் அறிவிப்பு:

    விரைவில் அறிவிப்பு:

    இப்படத்தின் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் விபரம் அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது. அப்போது, ஜெயலலிதா மற்றும் சசிகலா கதாபாத்திரங்களில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தெரிய வரும்.

    English summary
    We had previously reported that a few biopics on the late Tamil Nadu Chief Minister J Jayalalithaa are in the works. The latest to join the bandwagon is director K Jagadishwara Reddy, who is coming out with a project titled Sasilalitha.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X