சமைத்த உணவுக்கு குட்பை சொன்ன சசிகுமார், சமுத்திரக்கனி!

By Shankar

கதை இருக்கிறதோ இல்லையோ வெற்றி பெற்ற படத்தைச் சாக்காக வைத்துக்கொண்டு பார்ட் டூ எடுப்பதுதான் இப்போதைய ட்ரெண்ட்!சினிமா செய்திகளை தொடர்ந்து வாசிக்கும் உங்களுக்கு அந்தப் பட்டியலை இங்கே சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன்! நேராக இந்தச் செய்திக்கான விசயத்திற்கு போவோம்.

இயக்குநர் சசிகுமார்,சமுத்திரக்கனி இருவரின் கூட்டணியில் வெளிவந்து ஹிட்டடித்த படம் - நாடோடிகள். அதன் இரண்டாம் பார்ட் எடுப்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். ஏப்ரல் மாதம் மதுரையில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அதனாலென்ன? எல்லோரையும்போல் நாமளும் பார்ட் டூ எடுத்திரக்கூடாது என்று முடிவெடுத்திருக்கிறார்கள் சசிக்குமார், சமுத்திரக்கனி இருவரும்.

Sasiukumar, Samuthirakkani say no to cooked food

நாடோடிகள் திரைக்கு வந்து ஒன்பது வருடங்களாகிறது. அந்தப் படத்தில் இருக்கும் தோற்றத்தை பார்ட் டூவுக்கு கொண்டுவரப்போகிறார்கள். அதற்காக இருவரும் கடந்த இரண்டு வாரங்களாக சமைத்த உணவுகளை சாப்பிடுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார்கள்! நாள் முழுக்க காத்தாழை ஜெல், தண்ணீரில் ஊறவைத்த வேர்க்கடலை, தேங்காய் என இயற்கை உணவு மட்டும்தான்.

தவிர, நார்மலாக ஜிம்முக்குப் போவதைத் தவித்துவிட்டு லேட்டஸ்ட் வரவான...கரடு முரடான லாரி டயர்களை தூக்கிப்போட்டு உருட்டுவது, ராட்சஸ கயிறுகளை இரண்டு கைகளிலும் பிடித்துக்கொண்டு மேலும் கீழுமாக சுழற்றுவது என்று கடுமையான பயிச்சிகளையும் செய்கிறார்கள்.

"என் இந்தக் கொலவெறி?!" என்று சமுத்திரக்கணியிடம் கேட்டால்..."அப்ப நாடோடிகள் பண்றப்போ எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம இருந்திச்சு! இப்ப அப்படியில்லைல சகோ? அதுக்காக கொஞ்சம் மெனக்கிட்டுப் பாப்போமே," என்று சிரிக்கிறார்.

சம்போ...சிவசம்போ...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X