இன்னும் ஒரு ஷாட்டுக்குத்தான் வெயிட்டிங்.. கேரவனில் கிரிக்கெட் பார்த்த சதீஷ், பிரியா பவானி சங்கர்!

சென்னை: ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று சாதனை படைத்துள்ள இந்திய அணியை ஒட்டுமொத்த உலகமும் கொண்டாடி வருகிறது.

அமிதாப் பச்சன் முதல் சிவகார்த்திகேயன் வரை ஏகப்பட்ட பிரபலங்கள் இந்திய அணியின் வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நடிகர் அசோக் செல்வன், சதீஷ் மற்றும் பிரியா பவானி சங்கர் மூவரும் இணைந்து கேரவனில் கிரிக்கெட் பார்த்த வீடியோ வேற லெவலில் வைரலாகி வருகிறது.

கிரிக்கெட் ரசிகர்கள்

கிரிக்கெட் ரசிகர்கள்

இந்திய பிரபலங்கள் பலரும் கிரிக்கெட்டுக்கு பரம ரசிகர்கள் என்று சொல்லலாம். இந்தியர்கள் பலரும் கூட மற்ற விளையாட்டுப் போட்டிகளை விட கிரிக்கெட் என்றால் உயிரையே விட்டு விடும் அளவுக்கு தீவிர ரசிகர்களாக உள்ளனர். இந்தியா ஆஸ்திரேலிய மண்ணிலேயே அந்த அணியை வீழ்த்தி உள்ளதை பலரும் கொண்டாடி வருகின்றனர்.

பாராட்டிய பிரபலங்கள்

பாராட்டிய பிரபலங்கள்

இந்திய டெஸ்ட் அணியின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், அமிதாப் பச்சன், மோகன் லால், அக்‌ஷய் குமார், சிவகார்த்திகேயன் என சினிமா பிரபலங்களும் ட்வீட் போட்டு வாழ்த்தி பாராட்டி வருகின்றனர்.

கேரவனில் கிரிக்கெட்

கேரவனில் கிரிக்கெட்

இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். காமெடி நடிகர் சதீஷும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மூவரும் ஒன்றாக ஒரே கேரவனில் இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை பார்க்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

ஷாட்டுக்கு வெயிட்டிங்

உதவி இயக்குநர் ஒருவர், சார் ஷாட்டுக்கு வெயிட்டிங் என வீடியோவை எடுத்துக் கொண்டே கேட்க, நாங்களும் ஒரே ஒரு ஷாட்டுக்குத்தான் வெயிட்டிங் என இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட்டின் வெற்றி தருணத்தை அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் மற்றும் சதீஷ் பார்ப்பது போல எடுக்கப்பட்ட வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் காமெடி நடிகர் சதீஷ் வெளியிட்டுள்ளார்.

நமக்கு சோறு தான் முக்கியம்

நமக்கு சோறு தான் முக்கியம்

நடிகர் அசோக் செல்வன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் ரொம்ப சீரியஸாக கிரிக்கெட் மேட்சை பார்த்துக் கொண்டிருக்கும் போது, நடிகை பிரியா பவானி சங்கர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டே டெஸ்ட் போட்டியை கண்டு ரசித்ததை பார்த்த நெட்டிசன்கள், நமக்கு சோறு தான் முக்கியம் என அவரை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X