செம கெட்டப்.. ஆனா ’கட்’ பண்ணிட்டாங்க.. தமிழ்ப்படம் 2வில் வெளிவராத கெட்டப்பை வெளியிட்ட சதீஷ்!

சென்னை: காமெடி நடிகர் சதீஷ், தமிழ்ப்படம் 2வில் வெளிவராத தனது கெட்டப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கிரேஸி மோகனின் நாடக ட்ரூப்பில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளாக நடித்து வந்த சதீஷ், கிரேஸி மோகன் இயக்கத்தில் வெளியான ஜெர்ரி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து காமெடியில் கலக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

வசனகர்த்தா

வசனகர்த்தா

கிரேஸி மோகனின் புகழ்பெற்ற நாடகமான சாக்லேட் கிருஷ்ணாவுக்கு வசனம் எழுதி பிரபலமான நடிகர் சதீஷ், இயக்குநர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் 2008ம் ஆண்டு வெளியான பொய் சொல்லப் போறோம் படத்திற்கு துணை வசனகர்த்தாவாக பணியாற்றினார். 2010ம் ஆண்டு வெளியான மதராசபட்டினம் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார்.

சிவகார்த்திகேயனுடன்

சிவகார்த்திகேயனுடன்

மெரினா படத்தின் மூலம் ஹீரோவான சிவகார்த்திகேயனுடன் நடிகர் சதீஷும் காமெடியில் களம் இறங்கினார். தனுஷ் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கும் நடிகர் சதீஷுக்கும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து, மான் கராத்தே, ரெமோ, மிஸ்டர் லோக்கல் என சிவாவுடன் இணைந்து சதீஷ் கலக்கி வருகிறார்.

வில்லன்

வில்லன்

காமெடியில் கலக்கி வந்த நடிகர் சதீஷ், தமிழ்ப்படம் 2வில் வில்லனாக நடித்து இருந்தார். பெண் வேடம், கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதாபாத்திரம், பக்‌ஷி ராஜன் என அந்த படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் சதீஷ் கலக்கி இருந்தார். அகில உலக சூப்பர்ஸ்டார் சிவாவுக்கு போட்டியாக நடனம் ஆடும் காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

நீக்கப்பட்ட காட்சி

நீக்கப்பட்ட காட்சி

சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியான தமிழ்ப்படம் 2வில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றின் புகைப்படத்தை நடிகர் சதீஷ் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார். ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த இருமுகன் படத்தில் நெகட்டிவ் ரோலில் விக்ரம் நடித்திருந்த கெட்டப்பில் சதீஷ் அட்டகாசமாக கலக்குகிறார்.

செம கலாய்

செம கலாய்

சமீபத்தில் திருமணம் முடிந்த நடிகர் சதீஷுக்கு சுப்பர்ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தனது ட்விட்டர் பக்கத்தில் சதீஷ் வெளியிட்ட இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல வேலை இதை யூஸ் பண்ணல.. இல்லைன்னா விக்ரம் மார்க்கெட் போயிருக்கும் என சதீஷை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X