நாயா... சேகரா... மல்லுக்கட்டும் சதீஷ்... புத்தாண்டு துவக்கத்தில் டீசர் வெளியீடு!
சென்னை : நடிகர் சதீஷ் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் நாய் சேகர்.
இந்தப் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
படத்தில் நாயுடன் சதீஷ் மல்லுக்கட்டுவது டீசர் மூலம் வெளியாகியுள்ளது.

நடிகர் சதீஷ்
தன்னுடைய டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகர் சதீஷ். விஜய் உள்ளிட்ட முன்னணி நாயகர்களுடன் இவர் இணைந்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது நாயகனாக நாய் சேகர் என்ற படத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.

கிஷோர் ராஜ்குமார் இயக்கம்
படத்தை கிஷோர் ராஜ்குமார் இயக்கி வருகிறார். படத்திற்கு அஜீஷ் இசையமைத்துள்ளார். படத்தில் சதீஷிற்கு ஜோடியாகியுள்ளார் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா. படத்தில் மேலும் ஜார்ஜ் மரியன், லிவிங்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன், மனோபாலா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

டீசர் வெளியீடு
முன்னதாக படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. படத்தில் சதீஷ் நாய் போன்ற குணாதிசயத்துடனும் நாய் ஒன்று மனிதனின் குணாதிசயத்துடனும் இருப்பது போன்ற காட்சிகள் காணப்படுகின்றன.

நாய்க்கு முக்கிய கதாபாத்திரம்
இந்தப் படத்தில் நாய் ஒன்றிற்கு முக்கியமான கதாபாத்திரம் காணப்படுகிறது. இதில் சிறப்பான விஷயம் இந்த நாய்க்கு நடிகர் மிர்ச்சி சிவா பின்னணி கொடுத்துள்ளார். நடிகர் வடிவேலு கேட்டபொழுது கூட நாய் சேகர் என்ற தலைப்பை கொடுக்காமல் படக்குழுவினர் படப்பிடிப்பை மேற்கொண்டுள்ளனர்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இந்நிலையில் படத்தின் போஸ்டர்கள், டீசர் உள்ளிட்டவையும் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. படத்தில் சதீஷ் எப்போதும் போல தன்னுடைய சிறப்பான டைமிங் சென்ஸ் மற்றும் உடல்மொழியால் சிறப்பாக நடித்துள்ளார். படத்திம் ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரீட்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











