'இந்த வேலைக்கு காசு வேற தராங்க...' - ஆர்யா நிகழ்ச்சியைக் கலாய்த்த சதீஷ்!
Recommended Video

சென்னை : தமிழ் சினிமா உலகில் இந்தக் கேள்வி மட்டும் பல வருடங்களாகக் கேட்கப்பட்டு வருகிறது. நடிகர் ஆர்யாவுக்கு எப்போது திருமணம் எனும் கேள்விதான் அது.
இப்போது, தொடங்கப்பட்டிருக்கும் கலர்ஸ் டி.வி-யில் ஆர்யா திருமணம் செய்துகொள்ளப் பெண் தேடும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.
அவரை அவரது நண்பரும் காமெடி நடிகருமான சதீஷ் ட்விட்டரில் கலாய்த்து பதிவிட்டுள்ளார். ஆர்யாவும் பதிலுக்கு சதீஷை வாரி இருக்கிறார்.

ஆர்யா
கலர்ஸ் டி.வி-யில் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற சுயம்வரம் நிகழ்ச்சியை நடத்துகிறார் ஆர்யா. இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்யவுள்ளார். அதற்காக ஆர்யா தற்போது நிகழ்ச்சியின் மூலம் பெண் தேடி வருகிறார்.

பெண் தேடும் ஆர்யா
இந்த நிகழ்ச்சியில் பல பெண்கள் விண்ணப்பித்து கலந்து கொண்டிருக்கின்றனர். ஆர்யா எப்போது திருமணம் செய்துகொள்வார் என அவரின் நண்பர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், சமீபத்தில் காமெடி நடிகர் சதீஷ் அவரை ட்விட்டரில் கலாய்த்து ட்வீட் செய்துள்ளார்.
இதுக்கு காசு வேற தராங்க
அதில், "ஆர்யா டார்லிங் சும்மாவே இததான் செஞ்சிட்டு இருந்தீங்க. இப்போ இந்த வேலைக்கு காசு வேற தராங்க" என கிண்டலாக கூறியுள்ளார் சதீஷ். இந்த ட்வீட்டை ரசிகர்கள் அதிகமாக ரீ-ட்வீட் செய்தனர்.
இப்பவே ஆரம்பிங்க டார்லிங்
இதற்கு பதில் தெரிவித்த ஆர்யா அடுத்த சீசன்-ல நீங்களும் வந்திடுங்க. நான் ரெக்கமண்ட் பண்ணிருக்கேன். அதற்காக பயிற்சியை இப்போதே ஆரம்பித்து விடுங்கள் என கூறியுள்ளார். அதற்கு சதீஷ், நெக்ஸ்ட் சீசன் எப்போ ஸ்டார்ட் ஆகுது டார்லிங் எனக் கேட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications