ஒரே ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்!

Recommended Video

ஒரு ட்வீட்டால் ட்ரோல் செய்யப்பட்ட நடிகர் சதீஷ்!- வீடியோ

சென்னை: கால்பந்து போட்டி தொடர்பான சரத்குமாரின் ட்வீட்டுக்கு பதில் அளித்த சதீஷை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

கிரேசி மோகனின் நாடகக் குழுவில் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தோடு சினிமாவிற்கு வந்தவர் நடிகர் சதீஷ். நடிகர் மட்டுமல்லாமல் வசனகர்த்தாவாகவும் உள்ளார்.

Sathish tweet on Sarath statement!

தமிழ்ப்படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான சதீஷ் இப்போது தமிழ்ப்படம் 2-ல் தசாவதாரம் கமல்ஹாசனை விட அதிக வேடங்களில் தோன்றி அசத்தியுள்ளார். ஜிவியுடன் 100% காதல், 4ஜி மற்றும் ஆர்யாவுடன் கஜினிகாந்த் ஆகிய படங்கள் ரிலீசுக்கு காத்திருகின்றன. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்திலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் ஆர்ஜே.பாலாஜியின் ட்வீட்டுக்கு கிண்டலாக பதிலளித்தது இருவருக்குமிடையே பனிப்போரை உண்டாக்கியது.

இந்த நிலையில், நடிகர் சரத்குமாரின் ட்வீட்டுக்கு பதில் அளித்துள்ளார் சதீஷ். நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியை பார்த்துக் கொண்டிருந்த சரத்குமார், குரோஷியாவை பின்னுக்குத் தள்ளி பிரான்ஸ் கோல் மழை பொழிந்துகொண்டிருந்த நேரத்தில் தனக்கு இன்னும் குரேஷியா மீது நம்பிக்கை இருப்பதாக ட்வீட் செய்தார்.

அதற்கு எங்க சார்... அவனுங்க கிரிக்கெட்ல ரன் எடுக்குற மாதிரி கோலா போட்டுகிட்டு இருக்கானுங்க என சதீஷ் பதில் அளித்தார். அதற்கு சதீஷை பிக்பாஸ் பார்க்க சொல்லியும், சதீஷ் எப்போ காமெடி பண்ணுவார்னே தெரியாது என புளூ சட்டை மாறன் சொன்னது சரிதான் என்றும், ஃபுட்பால் பற்றி தெரியுமா என கேள்வி கேட்டும் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X