இனிமேல் இந்த சூப்பர் ஸ்டார் மகிழ்ச்சியாக இருப்பது டவுட்டு தான்: சதீஷ்
சென்னை: இனி அகில உலக சூப்பர் ஸ்டார் மகிழ்ச்சியாக இருப்பது சந்தேகம் தான் என்கிறார் நடிகர் சதீஷ்.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, சதீஷ் உள்ளிட்டோர் நாளையில் இருந்து நடிக்கப் போகும் படம் தமிழ் படம் 2.0. படப்பிடிப்பு நாளை துவங்க உள்ளது.
இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சிவா
சிவா சமாதியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தமிழ் படம் 2.0-ன் தயாரிப்பாளர் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சி
ஹேப்பி(இனி மேல் டவுட்டு தான்) பர்த்டே சிவா ப்ரோ என்று தியான புகைப்படத்துடன் வாழ்த்தியுள்ளார் நடிகர் சதீஷ்.
இரு அணிகள்
சதீஷின் ட்வீட்டை பார்த்த அமுதனோ, பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிவா. நாளைக்கு இரு அணிகளும் இணைந்து ஷூட்டிங்கிற்கு டைம்ல வந்துடுங்க என்று ட்வீட்டியுள்ளார்.
கலாய்
இந்தியா, இலங்கை அணிகள் இடையேயான ஒரு நாள் போட்டி இன்று நடந்து வருகிறது. இந்திய அணியின் பேட்டிங் ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது. இது குறித்தும் கலாய்த்து ட்வீட்டியுள்ளார் அமுதன்.


Click it and Unblock the Notifications











