நீண்ட இழுபறிக்கு பிறகு வெளியாகும்..“சதுரங்க வேட்டை2“..ரசிகர்கள் மகிழ்ச்சி !

சென்னை : சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு சற்று முன் அறிவித்துள்ளது.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை இயக்கிய எச் வினோத். தற்போது அஜித்தின் 61வது படத்தை இயக்கி வருகிறார்.

போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாக வைத்து ஏ.கே.61 திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித்துடன் மஞ்சுவாரியர் படத்தில் இடம் பெற்றுள்ளார்.

சதுரங்க வேட்டை

சதுரங்க வேட்டை

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சதுரங்க வேட்டை. இப்படத்தில் நட்டி, இஷா நாயர், பொண்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஒரு மனிதனின் பணத் தேவை எப்படி ஒருவனை ஏமாற்றுபவனாகவும், மற்றவனை ஏமாறுபவனாகவும் மாற்றுகிறது. பேராசைப் பேர்வழிகளை ஆசையை தூண்டி பணத்தை பறிக்கிறார் நட்டி. ஏமாற்றி அபகரித்த பணம் நிம்மதி எப்படி கெடுக்கிறது என்பது தான் சதுரங்க வேட்டையின் கதை.

சதுதுரங்க வேட்டை2

சதுதுரங்க வேட்டை2

சதுதுரங்க வேட்டை திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எச் வினோத் கதை வசனத்தில் சலீம் படத்தை இயக்கிய நிர்மல் குமார் என்பவரின் இயக்கத்தில் சதுரங்க வேட்டை இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி மற்றும் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், நாசர், ராதா ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை நடிகர் மனோபாலா தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அஸ்வின் விநாயக மூர்த்தி இசையமைத்துள்ளார்.

சம்பள பாக்கி பிரச்சனை

சம்பள பாக்கி பிரச்சனை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் தயாரிப்பாளர் தரப்பிற்கும், அரவிந்த் சாமிக்கும் இடையே சம்பளப் பாக்கி தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து சதுரங்கவேட்டை 2 திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு வெளியிட முடியாமல் தள்ளிப்போனது. இதையடுத்து இந்த விவகாரம், நீதிமன்றம் வரை சென்று பின்னர் முடிவுக்கு வந்தது.

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த நிலையில் சதுரங்க வேட்டை 2 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு சற்று முன் அறிவித்துள்ளது. அதன் படி அக்டோபர் 7ந் தேதி திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X