twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சத்யஜோதிபிலிம்ஸ் தியாகராஜனுக்கு புது பதவி..சவால்களை சமாளிப்பேன் என உறுதி !

    |

    சென்னை : இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் (CII) ஊடக மற்றும் பொழுது போக்கு பணிக்குழுவின் (தெற்குப் பிராந்தியம்) தலைவராகத் திரைப்படத்தயாரிப்பாளர் T.G. தியாகராஜன் நியமிக்கப்பட்டார்.

    இந்தியத் திரையுலகில் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர்களுள் ஒருவரும் பரவலாக மதிக்கப்படும் 'சத்யஜோதிபிலிம்ஸ்'என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவருமான T.G.தியாகரஜன் இந்தியத் தொழிற்கூட்டமைப்பின் (Confederation of IndianIndustry) ஊடக மற்றும் பொழுதுபோக்கு பணிக்குழுவின் (தெற்குப் பிராந்தியம்) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் தொழில்துறையின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டு வரும் அமைப்பே CII ஆகும். "இந்த செய்தி திடீரென்று வந்துள்ளது CII எனக்கு அளித்துள்ள இந்த கௌரவம் குறித்து நான்பெருமகிழ்ச்சி அடைகிறேன் என்று தியாகராஜன் கூறி உள்ளார்.

    மறைந்த சுஷாந்த்துக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தா? மணப்பெண் யார்? உறவினர் கூறியது என்ன?

    பெரும் சவால்

    பெரும் சவால்

    பிற தொழில்துறைகளைப் போலவே திரைத்துறையும் ஒருமாபெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளது. இத்தகைய சிக்கலான காலகட்டத்தில் இப்படியானபுதிய பொறுப்பை பெற்றுள்ளதால் இன்னும் சவாலான பலவேறு பல பணிகள் காத்துள்ளன. அந்த சவால் நிறைந்த பணிகளை என் முழுமனதுடன் சமாளிப்பேன், அவற்றைச் செய்து முடிக்கும் நன்னாளை எதிர்நோக்கி அவற்றைச் செய்து முடிக்கும் நன்னாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் என்றும் கூறினார்.

    வெற்றி

    வெற்றி

    திரைப்படத் தயாரிப்பாளராகவும் திரைத்துறையில் பல ஆண்டுகள் தீவிரப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவனாகவும் தனது நீண்ட பயணம் தந்துள்ள பயனுள்ள அனுபவத்தினால் இப்புதிய பணியில் வெற்றியை அடைவேன் என்று நம்புகிறேன் என்றும் சொல்லி உள்ளார்.

    முயற்சி

    முயற்சி

    கௌரவமிக்க இப்பதவிக்கு தன்னை நியமித்த CII உறுப்பினர்களுக்கு எனது நன்றியை சொல்லியதோடு 125 வருட காலப் பாரம்பரியமிக்க CII-இன் ஒரு பகுதியாக இருப்பதே ஒரு சிறப்புமிக்க கௌரவமாகும் என்றும் தன்னால் இயன்ற வரை இப்பதவிக்கு மேலும்கௌரவத்தைச் சேர்க்க நான் முயற்சி செய்வேன்," என்று கூறு உள்ளார் T.G.தியாகராஜன்.

    வெற்றி படங்கள்

    வெற்றி படங்கள்

    திறன்மிக்க திரைப்படத்தயாரிப்பாளராகவும், அற்புதமான ஊடகத் தொழில் புரிபவராகவும் விளங்கி வரும் T.G.தியாகராஜன் இதுவரை 5000-க்கு மேற்பட்ட சின்னத்திரை அத்தியாய தொடர்களையும் 40 திரைப்படங்களையும் நான்கு தென்னிந்திய மொழிகளிலும் தயாரித்துள்ளார். ‘சத்யஜோதிபிலிம்ஸ்' படநிறுவனத்தைத் தொடங்கி ‘சத்யா மூவீஸ்' என்ற புகழ்பெற்ற படநிறுவனம்மூலம் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்ஜீவி மற்றும் சிவாஜி கணேசன் போன்ற சூப்பர் ஸ்டார்கள் நடித்துள்ள பல்வேறு வெற்றிப் படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

    3 தேசிய விருதுகள்

    3 தேசிய விருதுகள்

    தியாகராஜனின் படங்கள் அவருக்கு மூன்று தேசிய விருதுகளையும் 20 மாநில விருதுகளையும் இதுவரை வென்றுள்ளன. சென்னை விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகப் பட்டத்தையும் கலிஃபோர்னியாவின் சாப்மன் பல்கலைக்கழகத்தில் MBA முதுகலைப் பட்டத்தையும் இவர்படித்தார். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கழகத்தின் முன்னாள் தலைவராகவும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் கௌரவ செயலராகவும் அவர்பணியாற்றியுள்ளார். மேலும், மெட்ராஸ் கிரிக்கெட் க்ளப்பின் முன்னாள் தலைவராகவும் மத்திய அரசின் திரைப்படத் தணிக்கை வாரியத்தின் (CBFC) போர்டு உறுப்பினராகவும்பணியாற்றியுள்ள இவர் S.T.E.P.S. எனப்படும் தென்னிந்திய சின்னத்திரைத்தயாரிப்பாளர்கள் சங்கத்தைத் தோற்றுவித்து அதன் முதல் தலைவராகவும் இருந்தார்.

    கலைமாமணி விருது

    கலைமாமணி விருது

    CII-இன் தென்னிந்திய ஊடக மற்றும் பொழுதுபோக்குப் பணிக்குழுவின் தலைவராக இருக்கிறார். கலை, பண்பாட்டுத்துறைகளுக்கு இவர் ஆற்றியுள்ள சேவையை கௌரவிக்கும் பொருட்டு இவருக்கு தமிழக அரசின்‘கலைமாமணி' விருதும் வழங்கப்பட்டது. திரைப்படத் துறையிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்து வந்துள்ள தியாகராஜன் தனது மாமா ‘கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் அத்தை டி.ஏ. மதுரம் ஆகிய இருவரின் மாபெரும் விசிறியும் ஆவார்.

    English summary
    Sathya jyothi films Thyagarajan appointed task force chair of CII Media and entertainment of south
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X