சென்னையில் இருந்து சிங்கப்பூர் போகும் ஆர்யாவின் தம்பி

By Mayura Akilan

ஆர்யாவின் தம்பி சத்யா வேலை வாய்ப்பு தேடி சிங்கப்பூர் போகிறாராம். இது படத்திற்காகத்தான். அமர காவியம்' படத்திற்குப் பிறகு ஆர்யாவின் தம்பி, சத்யா நடிக்கும் படம் ‘சென்னை சிங்கப்பூர்'.

சத்யாவிற்கு ஜோடியாக ஹெப்பா படேல் நடிக்கிறார். இவர் ஏற்கெனவே 'திருமணம் எனும் நிக்கா' படத்தில் நடித்திருக்கிறார்.

பல்வேறு ஆவண படங்களை தயாரித்து இயக்கிய அப்பாஸ் அக்பர், இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.

சென்னை சிங்கப்பூர்

சென்னை சிங்கப்பூர்

சென்னையைக் சார்ந்த ஒரு வளரும் இயக்குனர் சிங்கப்பூருக்கு வாய்ப்பு தேடி வருகிறான். அங்கே அவன் சென்னையைக் சேர்ந்த ஒரு பெண்னை சந்திக்க நேரிடுகிறது. அவர்களுக்குள் அங்கே உருவாகும் காதலும், அதன் தொடர்ச்சியாக எற்படும் சம்பவங்களும்தான் சென்னை சிங்கப்பூர் படத்தின் கதை.

சிங்கப்பூர் மீடியா

சிங்கப்பூர் மீடியா

இப்படத்தை காமிக் புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்னும் புதிய பட நிறுவனம், சிங்கப்பூர் மீடியா அதாரிட்டி நிறுவனத்தாருடன் இணைந்து தயாரிக்கின்றது.

ஜிப்ரான் இசையில்

ஜிப்ரான் இசையில்

விரைவில் வெளியாகவுள்ள ஆந்திரா மெஸ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள முகேஷ், இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்க, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார்.

2015ல் ரிலீஸ்

2015ல் ரிலீஸ்

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த பல்வேறு திரை உலக பிரபலங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றும் 'சென்னை சிங்கப்பூர்' படம் அக்டோபர் தொடங்கி அடுத்த வருடத்தின் துவக்கத்தில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X