twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Viswasam- விஸ்வாசம் பஞ்சாயத்து ஓவர்.. உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட சத்யஜோதி தியாகராஜன்!

    |

    Recommended Video

    உண்மையான வசூல் நிலவரத்தை வெளியிட்ட தயாரிப்பாளர்- வீடியோ

    சென்னை: அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் உண்மையான வசூல் நிலவரங்கள் குறித்து, அப்படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் விளக்கமாகத் தெரிவித்துள்ளார்.

    பொங்கலையொட்டி சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் ரிலீசானது. இப்படத்தில் அஜித்துடன் நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    'குழந்தை'.. தமிழில் டிவிட் போட்ட அமலாபால்.. நவரசத்தையும் கலந்து விதவிதமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்! 'குழந்தை'.. தமிழில் டிவிட் போட்ட அமலாபால்.. நவரசத்தையும் கலந்து விதவிதமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

    குடும்பக் கதையில் காதல், செண்டிமெண்ட், ஆக்சன் கலந்து சொல்லி இருந்ததால், இப்படத்திற்கு வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 7 வாரங்கள் கடந்தும் இன்னமும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

    இதனால், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபம் கிடைத்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, விஸ்வாசம் பட வசூலைப் பற்றி படம் ரிலீசான நாள் முதல் பல்வேறு தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றன.

    தியாகராஜன்:

    தியாகராஜன்:

    ஆனால், படத்தயாரிப்பு நிறுவனம் அது குறித்து எதுவும் வாய் திறக்காததால், அதன் உண்மைத்தன்மை பற்றிய குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், விஸ்வாசம் படத் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் முதன்முறையாக இது பற்றி பேசியுள்ளார்.

    பிளாக்பஸ்டர் படம்:

    பிளாக்பஸ்டர் படம்:

    இது தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அவர், ‘இந்தப் படம்தான் எனது வாழ்நாளிலேயே ஆகச்சிறந்தது. இத்திரைப்படம் ஒரு ப்ளாக்பஸ்டர் வெற்றி. இதற்கான பாராட்டு அஜித், இயக்குநர் சிவா மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் தான் செல்ல வேண்டும்.

    உண்மையான வசூல்

    உண்மையான வசூல்

    இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களின் வாழ்நாள் பங்கு என்பது ரூ.70 கோடி முதல் ரூ.75 கோடி வரை எட்டும். எந்த ஒரு அளவுகோலை வைத்து மதிப்பிட்டாலும் இந்த வசூல் வியப்புக்குரியது.

    ஓபனிங் கிங் அஜித்

    ஓபனிங் கிங் அஜித்

    படத்தின் கரு குடும்பம் குடும்பமாக வந்து ரசிகர்களை படம் பார்க்க வைத்தது. 600 திரையரங்குகளில் நாங்கள் படத்தை ரிலீஸ் செய்ய முடிந்தது எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அஜித்தை எப்போதும் ஓப்பனிங் கிங் என்றுதான் அழைக்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.

    English summary
    Sathyajyothi Films Thyagarajan has opened up about the real box office collections of the film Viswasam in TN and has come up with the staggering 130 Crores with the distributor share being 75 Crores.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X