Rajinikanth - பாகிஸ்தான் மக்களே ரஜினி படத்தைத்தான் பார்க்கிறார்கள்.. ரஜினி ஆதரவாளர் பிரத்யேக பேட்டி
சென்னை: Rajinikanth Supporter Sathyan Ramasamy (ரஜினிகாந்த் ஆதரவாளர் சத்யன் ராமசாமி) பாகிஸ்தான் மக்களே ரஜினி படத்தைத்தான் பார்க்கிறார்கள் என ரஜினியின் ஆதரவாளர் சத்யன் ராமசாமி தமிழ் ஃபில்மிபீட்டுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில் கூறியிருக்கிறார்.
ரஜினிகாந்த் மட்டும்தான் ஒரே சூப்பர் ஸ்டார் என்ற பேச்சு பல வருடங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அவரது நடிப்பில் வெளியான தர்பார், அண்ணாத்த ஆகிய படங்கள் அடைந்த தோல்வியால் ரஜினிகாந்த்துக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் இனி இல்லை என பலர் பேச ஆரம்பித்தனர். அதேசமயம் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என்ற குரல்களும் கேட்க ஆரம்பித்தன.

ஆரம்பித்த பஞ்சாயத்து: இப்படிப்பட்ட சூழலில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டுக்கு முன்னதாகவே ரஜினியா இல்லை விஜய்யா என்ற பஞ்சாயத்து ஆரம்பித்தது. அந்தப் பஞ்சாயத்துக்கு மேலும் வலுகூட்டுவது போல் இருந்தது ரஜினி சொன்ன காக்கா, பருந்து கதை. இதனையடுத்து ஜெயிலர் படம் ரிலீஸானது. படமும் இதுவரை 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது.
அடுத்தக்கட்ட பஞ்சாயத்து: ஜெயிலர் படம் ரிலீஸாவதற்கு முன்னதாகவே ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார். அங்கு சென்ற அவர் தனது வழிபாடுகளை முடித்துவிட்டு ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தார். அந்த சந்திப்பில் யோகி ஆதித்யநாத்தை சந்தித்தபோது அவரது காலில் விழுந்தார் ரஜினி. அது ரஜினியின் ஆன்மீக பயணத்தில் அடுத்தக்கட்ட பஞ்சாயத்தை ஆரம்பித்துவைத்தது.
விஜய்தான் கிங்: ஏற்கனவே காக்கா, பருந்து கதையால் விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களையும், ரஜினியையும் சீண்டிக்கொண்டிருக்க; ரஜினி காலில் விழுந்த விவகாரத்தை கையில் எடுத்தனர் விஜய் ரசிகர்கள். யோகி ஆதித்யநாத் காலில் ரஜினி விழுந்துவிட்டார்; அவர் பாஜகவின் ஆதரவாளர்; முக்கியமாக அவர் ஒரு கன்னடர்; எங்கள் தளபதிதான் தமிழர் என்று விஜய் ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்தனர். அதற்கு பதிலடியாக விஜய் ஜெயலலிதாவை புகழ்ந்தது, கருணாநிதியின் காலில் விழுந்தது, அன்னா ஹசாரேவை சந்தித்தது, நரேந்திர மோடியை சந்தித்தது தொடர்பான வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு பதிலடி கொடுத்தனர்.
ரஜினி கன்னடரா?: இந்நிலையில் தமிழ் ஃபில்மிபீட்டுக்கு ரஜினியின் ஆதரவாளர் சத்யன் ராமசாமி பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "பாகிஸ்தான் மக்களே தமிழ் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி படங்களை மட்டும்தான் பார்ப்போம் என சொல்கிறார்கள். கமல் ஹாசனையும், விஜய்யையும் தமிழர்கள் என்று தூக்கி வைக்கிறார்கள். ஆனால் ரஜினியையோ கன்னடர் என ஒதுக்கி வைக்கிறார்கள். அவர் ஒரு கன்னடர் அதனால்தான் தமிழர்களின் மானத்தை யோகி ஆதித்யநாத்தின் காலில் அடகு வைத்துவிட்டார் என்று சொல்கிறார்கள். இதெல்லாம் கேவலம்.

ரெய்டுக்கு பயந்தாரா?: ரெய்டுக்கு பயந்துதான் பாஜக தலைவர்களை மட்டும் ரஜினிகாந்த் சந்தித்தார் என்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வென்று வந்த பிறகு முதலில் பார்த்து கொரோனா நிதியாக 50 லட்சம் ரூபாயை ரஜினி கொடுத்தார். இதுபோல் எத்தனையோ பேரை அவர் சந்தித்திருக்கிறார். அதேசமயம் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் அகிலேஷ் யாதவையும் சந்தித்தார். அவர் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவையும் வாழ்த்தியிருக்கிறார்; ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிர்க்கட்சியாக இருக்கும் சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்தார்.
முழு உரிமை கொடுத்திருக்கிறார்: தமிழ் மக்களை ரஜினிகாந்த் கேவலப்படுத்திவிட்டார் என்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களை உலக அளவில் பெருமைப்படுத்திய முதலும் கடைசியுமான நடிகர் ரஜினிகாந்த்தான். அவரை எவ்வளவு வேண்டுமானால் பேசலாம். பாகிஸ்தானிலிருந்து ஒருவர் தமிழ் படங்களில் நாங்கள் பார்க்கும் ஒரே ஒருவரது படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படம் மட்டும்தான் என சொல்கிறார். பாகிஸ்தான் நம்முடைய எதிரி நாடு. அங்கேயே ரஜினிகாந்த் உள்ளே போனவர். எங்களை எதிர்ப்பவர்களை நாங்கள் காக்காவாகத்தான் பார்க்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











