ரசிகர்களை சந்திக்கும் ரஜினி..எப்போ தெரியுமா?அண்ணன் சத்தியநாராயண ராவ் சொன்ன மாஸ் தகவல்!
சென்னை : ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அவரது சகோதரர் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தில் யோகிபாபு,மலையாள நடிகர் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

அண்ணாத்த
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக நடித்திருந்த நிலையில், ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். மேலும் குஷ்பூ, மீனா, பாண்டியராஜன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

ஜெயிலர்
தற்போது ரஜினி, கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கிய நிலையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ்
இந்நிலையில், சென்னை வியாசர்பாடியில் தனியார் மண்டபத்தில் அமைந்துள்ள ரஜினிகாந்த் சமூக அறக்கட்டளையை, ரஜினியின் சகோதரர் சத்தியநாராயண ராவ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், இந்த அறக்கட்டளையின் நிறுவனர் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது, அவர் ரஜினிகாந்த் பெயரில் பல உதவிகளை செய்து வருகிறார். இந்த அமைப்பு நன்றாக வளர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்றார்.

அரசியலுக்கு வருவாரா?
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படப்பிடிப்பு முடித்து விட்டு ரசிகர்களை சந்திப்பார், ரசிகர்கள் சந்திப்பு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு நிச்சயம் ஒரு நாள் முடிவுசெய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்றார். மேலும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது இறைவனிடம் தான் உள்ளது. ரஜினிகாந்த் ஆளுநரை அன்பு மற்றும் பாசத்தின் அடிப்படையில் சந்தித்தார் என்றார்.


Click it and Unblock the Notifications











