Sathyaraj: சத்யராஜ் வீட்டில் ஏற்பட்ட திடீர் சோகம்... அம்மாவை இழந்த துக்கத்தில் குடும்பத்தினர்!
கோவை: தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகரான சத்யராஜ் பல படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் சத்யராஜ் வீட்டில் திடீரென சோகமான நிகழ்வு ஏற்பட்டுள்ளது. சத்யராஜ்ஜின் அம்மா நாதாம்பாள் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.

94 வயதான நாதாம்பாள் மறைவுக்கு திரையுலகினர் உட்பட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சத்யராஜ் வீட்டில் திடீர் சோகம்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். 1980களில் வில்லனாக சினிமாவில் அறிமுகமானவர், அதன்பின்னர் டாப் ஹீரோக்களில் ஒருவராக கலக்கி வந்தார். 1990களில் ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு போன்ற நடிகர்களின் படங்களுக்கு நிகராக சத்யராஜ்ஜும் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மாஸ் காட்டினார்.
தற்போது சீனியர் நடிகராகிவிட்ட சத்யராஜ், இளம் ஹீரோக்களின் படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார். ராஜா ராணி, பாகுபலி போன்ற படங்கள் சத்யராஜ்ஜின் இரண்டாவது இன்னிங்ஸ்க்கு அடித்தளமிட்டது. இதனிடையே அவரது மகன் சிபிராஜ்ஜும் பல படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சத்யராஜ்ஜின் அம்மா வயது முதிர்வு காரணமாக இன்று (ஆக.11) காலமானார்.
சத்யராஜின் அம்மா நாதாம்பாளுக்கு வயது முதிர்வு காரணமாக சில பிரச்சினைகள் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், கோயம்புத்தூரில் அவரது சொந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், இன்று மாலை 4 மணியளவில் அவர் காலமானதாகக் கூறப்படுகிறது. அவருக்கு 94 வயது. சத்யராஜ்ஜுக்கு கல்பனா மொன்ராடியார், ரூபா சேனாதிபதி என இரு சகோதரிகள் உள்ளனர்.
படப்பிடிப்புக்காக ஐதராபாத் சென்றிருந்த சத்யராஜ், அம்மாவின் மறைவு குறித்து அறிந்ததும் உடனடியாக கோவைக்கு புறப்பட்டுவிட்டாராம். சத்யராஜ் கோவை சென்றதும் அவரது அம்மாவின் இறுதிச் சடங்கு நடைபெறும் என சொல்லப்படுகிறது. சத்யராஜ்ஜின் அம்மா உயிரிழந்த செய்தி அறிந்த திரையுலகினரும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











