twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    திருமாவுக்கு அனுமதி மறுப்பு: இலங்கைக்கு சத்யராஜ் கண்டனம்

    By Chakra
    |

    Sathyaraj
    சென்னை: பார்வதியம்மாள் இறுதிச் சடங்கில் பங்கேற்க திருமாவளவனுக்கு அனுமதி மறுத்த இலங்கைக்கு நடிகர் சத்யராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நடிகர் சத்யராஜ் விடுத்துள்ள அறிக்கை:

    "விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மரணம் அடைந்ததற்காக, உலக தமிழர்களுடன் சேர்ந்து நானும் வருத்தப்பட்டேன்.

    பார்வதி அம்மாளின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக, சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு பள்ளியில் பழ.நெடுமாறன், வைகோ ஆகிய இருவரின் தலைமையில் இரங்கல் கூட்டம் நடந்தது. அங்கு சென்று நான் அஞ்சலி செலுத்தினேன்.

    பார்வதி அம்மாளின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்துவதற்காக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இலங்கைக்கு செல்ல இருந்தார். அதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி மறுத்து இருக்கிறது.

    இதற்காக, என் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இதில் இருந்து இலங்கையில் தமிழர்களுக்கு சுதந்திரம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.''

    இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் சத்யராஜ் கூறியிருக்கிறார்.

    அதே போல பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் திருமாவளவனுக்கு "டிப்ளமேட்டிக் பாஸ்போர்ட்' உள்ளது. அதன் மூலம் எந்த நாட்டுக்கும் எப்போது வேண்டுமானாலும் செல்ல முடியும்.

    இந்த சிறப்பு பாஸ்போர்ட்டை மதிக்காமல் அவரை திருப்பி அனுப்பியிருப்பதன் மூலம் இந்தியாவையும், இந்திய வெளியுறவுத் துறையையும் இலங்கை அவமதித்துள்ளது என்று கூறியுள்ளார்.

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    கடலூர் கல்லூரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:

    கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவரணியினர் இலங்கை அரசை கண்டித்து கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    விருத்தாசலத்தில் ரயில் மறியல்:

    விருத்தாசலம் ரயில்வே டவுன் ஸ்டேஷனில் விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த ரயில்வே போலீஸார் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

    நெய்வேலியில்....:

    இலங்கை அரசைக் கண்டித்து நெய்வேலி நகர விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் நகரச் செயலர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, ராஜபட்சவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது.

    English summary
    Actor Sathyaraj condemned Sri Lankan govt for not allowing Thirumavalavan to attend the cremation of Prabhakaran's mother Parvathiammal.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X