ஜீன்ஸ் போட்ட சத்யராஜ் மகள்.. பார்க்க அப்படியே பொம்மை போல இருக்கீங்க என குவியுது கமெண்ட்ஸ்!

சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் அரசியலில் குதிக்கப் போகிறேன் என சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும், நியூட்ரிஷியனாக இருக்கும் அவர் சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருக்கிறார்.

சுடிதார், சேலை உள்ளிட்ட ஹோம்லி கெட்டப்பில் போட்டோக்களை வெளியிட்டு வந்த சத்யராஜின் மகள் திவ்யா தற்போது திடீரென அல்ட்ரா மாடர்னாக டி சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Sathyaraj daughter Divya Sathyaraj shares her jeans dress photos and received numerous comments

திவ்யா சத்யராஜ் அரசியலுக்கு வரப் போகிறாரா அல்லது சகோதரர் சிபிராஜ் போல சினிமாவுக்கு வரப் போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சத்யராஜ் மகள்: தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக பல சூப்பர் ஹிட் படங்களையும் நகைச்சுவை படங்களையும் கொடுத்து நம்மை எல்லாம் வியக்க வைத்த நடிகர் சத்யராஜ் தற்போது குணசித்ர கதாபாத்திரங்களில் கட்டப்பாவாகவும் தீபிகா படுகோன், நயன்தாரா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகைகளுக்கு அப்பாவாகவும் நடித்து வருகிறார். 1979ம் ஆண்டு மகேஸ்வரி சுப்பையா என்பவரை திருமணம் செய்துக் கொண்ட சத்யராஜுக்கு திவ்யா சத்யராஜ் என்கிற மகளும், சிபிராஜ் என்கிற மகனும் உள்ளனர். சிபிராஜ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், சத்யராஜின் மகள் நியூட்ரிஷியனாக பணியாற்றி வருகிறார்.

அப்பாவுக்கு அன்னையர் தின வாழ்த்து: ”எல்கேஜி முதல் இருந்தே என்னுடைய நண்பராக சத்யா இருக்கிறார். என்னோட க்ரஷ்கள், பிம்பல், PMS பிரச்சனைகள் என அனைத்தையும் அறிந்தவர் அவர். என்னை விட வயதில் மூத்தவர். சற்றே உயர்ந்தவர். என் நினைவுக்கு தெரிந்து 7 வயதில் இருந்து அவரை என் குழந்தையாகவே பார்த்துக் கொண்டு வருகிறேன்.

உலகிலேயே சிறந்த மனிதனாக இந்த குழந்தை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள். ஆனால், ஒரு நாளும் என் அப்பா முன்பாக அழுததே கிடையாது. ஒருவேளை நான் அழுதால் என் அப்பா அதை பார்த்தால் உடைந்து போய்விடுவார். எனக்கான பக்க பலமாக அவர் இதுவரை இருந்து வருகிறார். நியூட்ரிஷியனாக இதுவரை என் பணியை ஆற்றி உள்ளேன். விரைவில் அரசியலிலும் ஈடுபட முடிவு செய்திருக்கிறேன். ஆனால், அரசியலில் களமிறங்கினாலும் எனக்கு என் குடும்பம் தான் எல்லாமே. என் குடும்பத்தை காப்பாற்ற வேண்டுமென்றால் சூர்ய கிரகத்தின் வரிசையைக் கூட மாற்ற முயற்சிப்பேன். வாழ்க்கை எப்போதும் கடினமாக இருந்தாலும் கட்டப்பாவுடன் ஒரு காபி குடித்தால் போதும் அது என்னை உற்சாகப்படுத்தி முன்னேறி ஓட உதவும். ” என சினிமா டயலாக் போல வசனம் பேசி அப்பாவுக்கு அன்னையர் தின வாழ்த்துகளை சொல்லி சோஷியல் மீடியாவில் டிரெண்டானார்.

Sathyaraj daughter Divya Sathyaraj shares her jeans dress photos and received numerous comments

ஜீன்ஸ் போட்ட திவ்யா சத்யராஜ்: லெவிஸ் டிசர்ட், டெனிம் ஜீன்ஸ், தலையில ஹெட் பேண்ட் எல்லாம் மாட்டிக் கொண்டு சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் செம க்யூட்டாக போஸ் கொடுத்த புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், அப்படியே மெழுகு சிலை மாதிரியே இருக்கியேம்மா என வர்ணித்து வருகின்றனர். அக்கா இந்த பொம்மையை எவ்ளோ கொடுத்து வாங்குனீங்க உங்களை மாதிரியே இருக்கே என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அரசியல் எல்லாம் வேண்டாம் சீக்கிரம் சினிமாவுக்கு வாங்க பிரைட் ஃபியூச்சர் இருக்கு என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X