Sathyaraj Daughter: சத்யராஜிடம் மண்டியிட்டு அழுத மகள்.. எதுக்காகனு தெரியுமா? விஷயம் தெரிஞ்சா ஆடிப்போவீங்க!
சென்னை: நடிகர் சத்யராஜ் திராவிட இயக்க சிந்தனை கொண்டவர், மற்றும் செயல்பாட்டாளர். நடிகராக இவர் தனக்கு எந்த அளவுக்கு புகழ் ஈட்டினாரோ, அதே அளவுக்கு புகழ் திராவிட இயக்க சிந்தனைகளை பேசி புகழ் பெற்றார். அவரது மகள் திவ்யா சத்யராஜ் குறித்து அண்மையில் அடிக்கடி செய்திகள் வரக் காரணம் அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததுதான். இந்நிலையில் இவர் தான் அரசியலில் கால் பதிப்பதற்கு முன்னர் தனது வீட்டில் குறிப்பாக தனது பெற்றோரிடத்தில் எவ்வாறு எல்லாம் போராடி அனுமதி வாங்கினார் என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ், அடிப்படையில் மருத்துவர். இவர் தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல் சூழல் குறித்து தனது எண்ணத்தை வெளிப்படுத்தி வந்தார். இந்நிலையில் இவர் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இருக்கு திமுக தலைமை, தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கியது. இவரும் கட்சியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்குவதற்கு முன்னர், எவ்வாறு எல்லாம் தனது பெற்றோர்களிடத்தில் போராடி அனுமதி வாங்கினார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். அதாவது அவரது பதிவில், " நான் ஒரு அரசியல்வாதியாக விரும்புகிறேன் என்று என் பெற்றோரிடம் சொன்னபோது, அவர்கள் மிகவும் கவலைப்பட்டனர், ஆரம்பத்தில் எனது பெற்றோர்கள் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், நான் கெஞ்சினேன், அதுவும் யாசகம் பெறுவது போல கெஞ்சினேன், அழுதேன், அதன் பின்னர்தான் அவர்கள் சமாதானம் அடைந்தார்கள். ஒப்புக் கொள்ளவும் செய்தார்கள்.

காதலுக்காக போராடுங்கள்: குடும்பத்தினர் மற்றும் உறவினர்களின் அழுத்தம் காரணமாக தங்கள் காதலர்களை பிரிந்து செல்லும் பல ஆண்களையும் பெண்களையும் நான் பார்க்கிறேன். அவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான், தயவுசெய்து உங்கள் காதலுக்காக போராடுங்கள். உங்கள் காதலானது ஒரு நபர் அல்லது ஒரு தொழில் மீதான காதலாக இருக்கலாம். அதை ஒருபோதும் விட்டுக் கொடுக்காதீர்கள். நாம் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர்கள் என்பதால் நாம் விரும்புவதை பெற வேண்டும்.
சென்னை மேயர்: நான் அரசியல்வாதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். திமுக பெண்களை மதிக்கும் கட்சி. நான் அடுத்த சென்னை மேயராகப் போகிறேனா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள். நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மக்களுக்காக தன்னலமின்றி உழைப்பேன். ஒரு மக்களுக்காக பணியாற்றுபவளாக இருப்பதற்கு உண்மையிலேயே நன்றியுள்ளவளாக இருக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

கேள்வி: அவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது மட்டும் இல்லாமல், அவரது பதிவை பார்த்த பலரும், நடிகர் சத்யராஜ் திராவிட இயக்க அரசியலை ஏற்றுக் கொள்பவராக இருக்கிறார். திராவிடக் கருத்துக்களை பல மேடைகளில் பேசுகிறார். ஆனால் அவரே தனது மகள் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறும் போது, முதலில் தடுத்துள்ளாரே, என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். திவ்யா சத்யராஜின் பதிவு வேகமாக பரவி வருகிறது. சத்யராஜின் மகன் சிபி சத்யராஜ் விஜய்யின் தவெக ஆதரவாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











