Sathayaraj: மோடி பயோபிக்கில் நானா? எனக்கே தெரியாத நியூஸ்.. சத்யராஜ் பதில்!

சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மோடியாக நடிக்க, நடிகர் சத்யராஜ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என இணையத்தில் நேற்று செய்தி பரவியது. இதற்கு நடிகர் சத்யராஜ் தனது பாணியில் விளக்கம் அளித்துள்ளார்.

சினிமாவில் தற்போது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், ஜெயலலிதா, பாரதி, காமராஜர் பயோபிக்குகள் எடுக்கப்பட்டன. தற்போது, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உருவாகி வருகிறது. இதில், இளையராஜாவாக தனுஷ் நடிக்க இருக்கிறார்.

Sathyaraj explains about acting in Prime Minister Narendra Modi s biopic

அதிகரிக்கும் பயோபிக் படங்கள்: அதே போல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பயோபிக் திரைப்படமாக உருவாக இருப்பதாகவும், இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான சஜித் நதியத்வாலா தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே 83, சூப்பர் 30, கிக் உள்ளிட்ட படங்களை தயாரித்தவர் ஆவார். இதற்கு ரஜினிகாந்த் ஒகே சொல்லிவிட்டதாகவும், இதனால், கதை எழுதும் பணி தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியானது.

நரேந்திர மோடியின் பயோபிக்: இப்படி வாழ்க்கை வரலாற்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருப்பதாகவும், இதில் மோடியாக நடிகர் சத்யராஜ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளது. பிரம்மாண்டப் பொருட்செலவில் தயாராக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு தொடங்க உள்ளதாகவும் இதற்கான முறையான அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படக்குழுவினரின் விவரங்களும் விரைவில் வெளியாகும் என இணையத்தில் செய்திகள் வெளியானது.

புது செய்தி தான்: இது குறித்து பேசிய சத்யராஜ், பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றில் நான் நடிக்கிறேன் என்ற செய்தி, உங்கள் மூலமாகத்தான் எனக்கு தெரிந்தது. இது எனக்கு புதிய செய்தி தான். நாத்திகம் பேசிய எம் ஆர் ராதா பல படங்களில் ஆன்மீகவாதியாக நடித்திருக்கிறார். வாய்ப்பு வந்தால் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

தந்தை பெரியார் பயோபிக்: தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமான சத்யராஜ், பிறகு கதாநாயகனாக பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, தற்போது, குணசித்திர நடிகராக நடித்து வருகிறார். இவர், ஏற்கனவே தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான பெரியார் படத்தில் பெரியாராகவே கனகச்சிதமாக நடித்து அனைவர் மனதிலும் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X