கஸ்தூரிக்கு அல்வா ஊட்டிவிட்ட சத்யராஜ்.. அமைதிப்படை ரீ ரிலீஸ் அலப்பறைகள்.. ரஞ்சிதா மிஸ்ஸிங்!
சென்னை: 1994ம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ், ரஞ்சிதா, கஸ்தூரி நடிப்பில் வெளியான அரசியல் நய்யாண்டி திரைப்படமான அமைதிப்படை பல வருடங்கள் கழித்து இந்த தேர்தலுக்கு முன்பாக வரும் ஏப்ரல் 10ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
இந்நிலையில், அந்த படத்தின் புரமோஷனை சத்யராஜ் மற்றும் கஸ்தூரி இருவரும் மாறி மாறி அல்வா ஊட்டி விட்டுக் கொண்டு ஆரம்பித்துள்ள அலப்பறைகள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரஞ்சிதாவும் இருந்து அவரும் சத்யராஜுக்கு அல்வா ஊட்டிவிட்டு இருந்தால் இன்னமும் சூப்பராக இருக்குமே என்றும் அந்த சீன் மிஸ் ஆகிடுச்சே என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
அமைதிப்படை: புதுப்பேட்டை படத்தை எல்லாம் கல்ட் கிளாசிக் என கொண்டாடுவார்கள். அந்த படமெல்லாம் உருவாக இன்ஸ்பிரேஷனே மணிவண்ணன் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த அமைதிப்படை தான். அந்த படத்தில் அமாவாசை கதாபாத்திரத்தில் சத்யராஜ் அசத்தியிருப்பார். சாதாரண அமாவாசை எப்படி நாகராஜ சோழன் எம்.எல்.ஏவாக மாறுகிறார் என்பது தான் படத்தின் கதை.
அமைதிப்படை ரீ ரிலீஸ்: புதிய படங்கள் சொதப்பி வரும் நிலையில், பல நல்ல நல்ல பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து தயாரிப்பாளர்களும் தியேட்டர் ஓனர்களும் லாபம் பார்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில், வரும் ஏப்ரல் 10ம் தேதி அமைதிப்படையை ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கஸ்தூரி மற்றும் சத்யராஜ் பங்கேற்ற காட்சிகள் தீயாக பரவி வருகின்றன.
கஸ்தூரிக்கு அல்வா ஊட்டிவிட்ட சத்யராஜ்: அமைதிப்படை ரீ ரிலீஸ் படத்தின் புரமோஷனுக்காக ரொம்ப எல்லாம் செலவு செய்யாமல் கால் கிலோ அல்வாவை வைத்தே அமர்க்களமாக புரமோஷனை படக்குழு நடத்தியுள்ளது. சத்யராஜுக்கு கஸ்தூரி அல்வா ஊட்டிவிட, பதிலுக்கு சத்யராஜ் கஸ்தூரிக்கு அல்வா ஊட்டிவிட்டுள்ளார். பாஜக மற்றும் திமுக அல்வா ஊட்டி விடுகிறது என்றும் இதுதான் அந்த கள்ள கூட்டணியா? என்றும் தவெகவினர் ட்ரோல் செய்து வருகின்றனர். கில்லி, படையப்பா, சச்சின் உள்ளிட்ட ரீ ரிலீஸ் படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததை போல அமைதிப்படை ரீ ரிலீஸுக்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











