twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்னக்கலைவாணர் என் அன்புத்தம்பி… சத்யராஜ் இரங்கல் !

    |

    சென்னை : சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்னக்கலைவாணர் என் அன்புத் தம்பி மறைவு பேரதிர்ச்சியான செய்தி என நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Recommended Video

    நடிகர் விவேக் மறைவிற்கு நடிகர் Sathyaraj இரங்கல் பதிவு | RIP Vivek

    வேறும் வார்த்தைகளால் அவரது குடும்பத்திற்கோ, ரசிகளுக்கோ, கலை உலகத்திற்கோ, எனக்கோ ஆறுதல் சொல்ல முடியாது.

    மருத்துவர்களுக்கு நன்றி கூறிய விவேக்.. பார்த்து பார்த்து கதறும் ரசிகர்கள்.. வைரலாகும் கடைசி டிவிட்! மருத்துவர்களுக்கு நன்றி கூறிய விவேக்.. பார்த்து பார்த்து கதறும் ரசிகர்கள்.. வைரலாகும் கடைசி டிவிட்!

    விக்வேக்கை இழந்து வாடும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நானும் ஒருவன் என்று கண்ணீர் மல்க் சத்யராஜ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

    திடீரென நெஞ்சுவலி

    திடீரென நெஞ்சுவலி

    தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக் சென்னை சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    காலமானார்

    காலமானார்

    விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார்.

    குணசித்திர வேடத்தில்

    குணசித்திர வேடத்தில்

    59 வயதாகும் விவேக் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும் நடித்து இருக்கிறார்.

    1 கோடி மரக்கன்றுகள்

    1 கோடி மரக்கன்றுகள்

    திரைப்படங்களில் சீர்திருத்த கருத்துகளையும் பரப்பினார். இதனால் அவரை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைத்தனர். பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஆர்வம் காட்டினார். மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்துள்ளார்.

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்

    இவரது மறைக்கு நடிகர் சத்தியராஜ் இரங்கல் தெரிவித்து வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். இதில், சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சின்னக்கலைவாணர் என்று பெயர் வாங்கிய என் அன்புத் தம்பி விவேக் அவரது மறைவுக்கு என்ற வார்த்தையை சொல்வதேற்கு மனசு ரொம்ப கஷ்டமாஇருக்கு, அவர் நம்முடன் இல்லாமல் போனதற்கு என்னுடைய அழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். வேறும் வார்த்தைகளால் அவரது குடும்பத்திற்கோ, ரசிகளுக்கோ, கலை உலகத்திற்கோ, எனக்கோ ஆறுதல் சொல்வது என்பது முடியாத காரியம், தம்பிஉன்னை இழந்து வாடும் கோடிக்கணக்கான சகோதர்களின் , ரசிகர்களின் நானும் ஒருவன் என கண்ணீர் மல்க அந்த வீடியோ பதிவில் பேசி உள்ளார்.

    English summary
    Sathyaraj has condoled the death of actor Vivek
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X