மேடையில் ஒரு செகண்ட் ப்ளூ சட்டை மாறனாக மாறிய சத்யராஜ்.. நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றி செம ஸ்பீச்!

சென்னை: அங்காரகன் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகப்பட்ட சுவாரஸ்ய விஷயங்களை பேசிய நடிகர் சத்யராஜ் திடீரென ப்ளூ சட்டை மாறன் போல பேச அரங்கமே ஆடிப் போய் விட்டது.

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படத்தை தொடர்ந்து ப்ளூ சட்டை மாறன் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின், கெளதம் கார்த்திக், சத்யராஜ் உள்ளிட்ட பலர் ப்ளூ சட்டை மாறன் பற்றி பேசிய வீடியோக்களும் அதிகம் பரவி வருகின்றன.

Sathyaraj imitates Blue Sattai Maran at Angaragan Press meet

தொல் திருமாவளவன் பிறந்தநாள் விழாவுக்கு சென்றது, தனது அரசியல் கொள்கை உள்ளிட்ட பல விஷயங்களையும் பேசிய சத்யராஜ் நெகட்டிவ் விமர்சனங்கள் பற்றியும் வெளிப்படையாக பேசியது அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

நல்ல படம் எடுக்கணும்: பத்திரிகையாளர்கள் அவர்கள் தர்மத்தை தான் கடைபிடிக்க வேண்டும். நல்லா இல்லாத படத்தை எடுத்து விட்டு அந்த படத்தை நல்ல படம் என சொல்ல வேண்டும் என அடம்பிடிக்கக் கூடாது. எனக்கு தெரிஞ்சு 40 வருஷமா நடிச்சிட்டு வரேன், நல்லா நடிச்சா நல்லா நடிச்சிருக்கேன்னு பத்திரிகையாளர்கள் பாராட்டி உள்ளனர். நல்லா நடிக்கவில்லை என்றால், அதை விமர்சித்துள்ளனர் என்றார்.

நாம கெஞ்சக் கூடாது: நல்ல படங்களை கொடுப்பது தான் சினிமாக்காரர்களின் வேலையே தவிர மோசமாக படத்தை எடுத்து விட்டு இதை எப்படியாவது நல்ல படம்னு சொல்லி ப்ரமோட் பண்ணுங்க என நாம பத்திரிகையாளர்களிடம் கெஞ்சக் கூடாது என பேசினார் சத்யராஜ்.

ஒரு செகண்ட் ப்ளூ சட்டை மாறன்: அங்காரகன் படக்குழுவினர் இந்த படத்திற்கு பத்திரிகை நண்பர்கள் ஆதரவு தரணும்னு சொல்லக் கூடாது. அவங்க பார்க்கட்டும். பார்த்துட்டு படம் நல்லா இருந்தா நிச்சயம் நல்லா இருக்குன்னு சொல்வாங்க, இல்லைன்னா "இப்போ இந்த படத்தை பார்த்தீங்கனா" என ப்ளூ சட்டை மாறன் மாதிரி ஒரு செகண்ட் மேடையில் சத்யராஜ் பேச அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்து விட்டது.

அங்காரகன் படத்தில் மொட்டைத் தலையுடன் நூறாவது நாள் வில்லன் போல மீண்டும் வில்லத்தனத்தில் இறங்கி நடித்திருக்கிறார் சத்யராஜ். படம் நல்லா வந்திருக்குன்னு நினைக்கிறேன். நிச்சயம் பார்த்துட்டு உங்க கருத்தை சொல்லுங்க என பத்திரிகையாளர்களிடமும் சொல்லி கைதட்டல்களை அள்ளினார் சத்யராஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X