சத்யராஜுடன் மீண்டும் இணையும் சிபிராஜ் - காமெடி திரில்லர் படம்

சென்னை: ஜாக்சன் துரை, சத்யா படங்களின் வெற்றிக்கு பிறகு சிபிராஜ் தனது தந்தை சத்யராஜுடன் இணைந்து மீண்டும் ஒரு கலகலப்பான காமெடி படத்தில் இணைந்து நடிக்கப்போவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர்கள் சத்யராஜும் அவருடைய தனயன் சிபிராஜும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றால், அந்தப் படத்தில் நிச்சயமாக காமெடிக்கும் கலகலப்புக்கும் பஞ்சமிருக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஜோர், கோவை பிரதர்ஸ், வெற்றிவேல் சக்திவேல், மண்ணின் மைந்தன், ஜாக்சன் துரை போன்ற படங்கள் இதற்கு நல்ல உதாரணம்.

Sathyaraj joins with Sibiraj in New Thriller film

அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஜாக்சன் துரை படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்தது. தற்போது அதே பாணியில் மீண்டும் தந்தையும் தனயனும் இணைந்து திகில் கலந்த காமெடி படத்தை உருவாக்கப் போகிறார்கள்.

தற்போது மீண்டும் அதே போன்றதொரு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார்.

https://twitter.com/Sibi_Sathyaraj/status/1164884515048706049?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1164884515048706049&ref_url=https%3A%2F%2Fmovies.ndtv.com%2Ftamil%2Fkollywood%2Fsibi-sathyaraj-and-sathyaraj-are-joining-their-hands-again-for-a-film-2089524

தமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து ஜாக்சன் துரை வெற்றிப்படத்தில் நடித்திருந்தார். சத்யா படத்தை தயாரித்திருந்தார். இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.

கடந்தாண்டின் கவனிக்க தக்க படைப்பான சத்யா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் புதிய கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைகிறார்கள். முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தினை கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் அன் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பாக தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். சைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார். படத்தின் மற்ற தொழில்நுட்பக்குழு உறுப்பினர்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X