மீண்டும் மலையாளம்... மோகன்லாலுடன் ‘கதைக்கப்’ போகும் சத்யராஜ்
சென்னை: இயக்குநர் ஜோஷியின் 'லைலா ஓ லைலா' படத்தில் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் சத்யராஜ்.
ஏகனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் கமலின் 'அகதன்' என்ற மலையாளப் படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்திருந்தார் சத்யராஜ். இந்நிலையில் சத்யராஜை 'ஏர்போர்ட்' படத்தில் இயக்கிய ஜோஷியின் 'லைலா ஓ லைலா' என்ற மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார் சத்யராஜ்.
இப்படத்தின் நாயகனாக மோகன்லால் நடிக்கிறார்.

திருப்புமுனை....
கதாநாயகன் என்ற அந்தஸ்திலிருந்த நடிகர் சத்யராஜ், சிறந்த குணச்சித்திர நடிகர் என்ற இடத்தை இயக்குநர் ஷங்கரின் நண்பன் படம் மூலம் அடைந்தார்.

தொடர் வெற்றிகள்...
அதனைத் தொடர்ந்து, ஷாருகானின் சென்னை எக்ஸ் பிரஸ் இந்திபடத்திலும், நடிகர் விஜயுடன் தலைவா படத்திலும், நயன்தாராவின் தந்தையாக ராஜா ராணி படத்திலும், வருத்தப் படாத வாலிபர் சங்கம் படத்திலும் நடித்திருந்தார் சத்யராஜ்.

பிறமொழிப் படங்கள்....
அப்பா வேடம் என்றால் சத்யராஜிற்கு பொருத்தமாக இருக்கும் என்ற அளவிற்கு அக்கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து வருகிறார் சத்யராஜ். இவர் தற்போது, தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் பகுபாலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இரண்டாவது படம்....
இந்நிலையில், தற்போது மலையாளப் படமொன்றில் நடிக்க இருக்கிறார் சத்யராஜ். இது குறித்து அப்படத்தின் இயக்குனர் ஜோஷி கூறியதாவது, ‘படம் குறித்தும் அதில் அவரது கேரக்டர் குறித்தும் சத்யராஜுடன் பேசினோம். அவருக்கு அந்த கேரக்டர் பிடித்து உள்ளது, சத்யராஜிற்கு படத்தில் நல்ல வேடம் வேறு ஒன்று சொல்வதிற்கில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











