Sathyaraj: சத்யராஜ் தாயார் மறைவு... டிவிட்டரில் இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்!

சென்னை: முன்னணி நடிகரான சத்யராஜ்ஜின் அம்மா நாதாம்பாள் வயது முதிர்வு காரணமாக காலமானார்.

94 வயதான நாதாம்பாள் கடந்த சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் உயிரிழந்த சத்யராஜ் அம்மாவின் இறுதிச் சடங்கு இன்று கோவையில் நடைபெறும் எனத் தெரிகிறது.

 Sathyaraj: Kamal Haasan condoles the demise of actor Sathyarajs mother

இதனிடையே சத்யராஜ் அம்மா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சத்யராஜ் அம்மா மறைவுக்கு கமல் இரங்கல்: முன்னணி நடிகர் சத்யராஜ்ஜின் அம்மா நாதாம்பாள் வயது மூப்பு காரணமாக நேற்று மாலை காலமானார். அவருக்கு வயது 94. கோவையில் வசித்து வந்த நாதாம்பாள், சில மாதங்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.

சத்யராஜ் அம்மா நாதாம்பாளின் இறுதிச் சடங்கு இன்று கோவையிலேயே நடைபெறும் என சொல்லப்படுகிறது. முன்னதாக படப்பிடிப்புக்கு ஹைதராபாத் சென்றிருந்த சத்யராஜ், அம்மாவின் மறைவு செய்திக் கேட்டு உடனடியாக கோவை சென்றுள்ளார். அம்மாவை இழந்துவாடும் சத்யராஜ்ஜுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர், ரசிகர்கள் உட்பட பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

 Sathyaraj: Kamal Haasan condoles the demise of actor Sathyarajs mother

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனும் சத்யராஜ்ஜுக்கு ஆறுதல் கூறியுள்ளதோடு, அவரது அம்மா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து டிவிட் செய்துள்ளார். அதில், "நண்பர் சத்யராஜ் அவர்களின் தாயாரும், இளவல் சிபி சத்யராஜ் அவர்களின் பாட்டியுமான திருமதி. நாதாம்பாள் காளிங்கராயர் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன். அன்னையை இழந்து வாடும் அவருக்கும் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

சத்யராஜ்ஜின் ஆரம்பகாலங்களில் அவருக்கு அதிகமான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களில் கமல்ஹாசனும் ஒருவர். கமல் நடிப்பில் 1986ம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான விக்ரம் படத்தில் சத்யராஜ் தான் மெயின் வில்லனாக நடித்திருப்பார். அதுமட்டும் இல்லாமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் பேனரிலும் சத்யராஜ்ஜை ஹீரோவாக நடிக்க வைத்தவர் கமல்ஹாசன்.

 Sathyaraj: Kamal Haasan condoles the demise of actor Sathyarajs mother

ஆரம்ப காலங்களில் கமலின் சப்போர்ட் தான் சத்யராஜ்ஜுக்கு சினிமாவில் பல வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தது. அப்போது முதல் கமல் - சத்யராஜ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக பழகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சத்யராஜ் அம்மாவின் மறைவுக்கு கமல்ஹாசன் முதல் ஆளாக இரங்கல் தெரிவித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X