ஷாருக்-தீபிகாவின் 'சென்னை எக்ஸ்பிரஸில்' பாலிவுட் கிளம்பிய ஆச்சி, சத்யராஜ்!
சென்னை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடிக்கும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழுவினர் இந்தோனேசியா சென்றுள்ளனர். இந்த படத்தில் மனோரமா, ச்தயராஜ் மற்றும் ஷர்மிளி ஆகிய தமிழ் நடிகர்கள் நடிக்கின்றனர்.
பாலிவுட்டில் காமெடி படம் எடுப்பதில் கில்லாடி என்று பெயர் பெற்ற இயக்குனர் ரோஹித் ஷெட்டி ஷாருக்கான், தீபிகா படுகோனேவை வைத்து சென்னை எக்ஸ்பிரஸ் படத்தை எடுக்கிறார்.

5 ஆண்டுகளுக்கு பின் சேரும் ஷாருக்-தீபிகா
ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கான் ஜோடியாக தீபிகா நடித்தது தான் அவருக்கு முதல் படம். அதன் பிறகு 5 ஆண்டுகள் கழித்து தற்போது சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்காக இருவரும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

37 ஆண்டுகள் கழித்து பாலிவுட்டில் மனோரமா
கடந்த 1975ம் ஆண்டு குன்வரா பாப் என்ற இந்தி படத்தில் நடித்த மனோரமா 37 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாலிவுட் சென்றுள்ளார். சென்னை எக்ஸ்பிரஸில் தமிழ் பெண்ணாக வரும் தீபிகாவின் அத்தையாக நடிக்கிறார் ஆச்சி.

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் சத்யராஜ்
100 படங்களுக்கு மேல் நடித்துள்ள சத்யராஜ் தற்போது ஷாருக்கான் படம் மூலம் பாலிவுட் செல்கிறார். இந்த படத்தில் சத்யராஜ் தான் நாயகி தீபிகாவின் அப்பா.

தீபிகாவின் சித்தியாக ஷர்மிளி
தமிழில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து பெயர் வாங்கிய ஷர்மிளி சென்னை எக்ஸ்பிரஸில் தீபிகாவின் சித்தியாக நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











