20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வில்லனாக நடிக்கும் சத்யராஜ்!
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வில்லனாக நடிக்கிறார் பிரபல நடிகர் சத்யராஜ். எஸ் ஜே சூர்யாவின் இசை படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார். .
வாலி, குஷி, நியூ உள்பட பல படங்களை டைரக்டு செய்த எஸ்.ஜே.சூர்யா அடுத்து, 'இசை' என்ற படத்தை எழுதி இயக்கி நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையும் அவரே. இரு இசையமைப்பாளர்களைப் பற்றிய கதை இந்தப் படம்.
இந்த படத்தில், சத்யராஜ் 20 வருடங்களுக்குப்பின் மீண்டும் வில்லனாக நடிக்கிறார்.

அமைதிப்படை
இதுகுறித்து சத்யராஜ் கூறுகையில், "நான், 75 படங்களில் வில்லனாக நடித்துவிட்டுத்தான் ஹீரோவானேன். கடந்த 1994-ம் ஆண்டு வெளிவந்த 'அமைதிப்படை' படத்தில், கடைசியாக வில்லனாக நடித்தேன்.

சிவாஜி
சில வருடங்களுக்கு முன்பு 'சிவாஜி' படத்தில் வில்லனாக நடிக்கும்படி எனக்கு அழைப்பு வந்தது. அதற்கு சம்பளமாக மிகப்பெரிய தொகையைத் தருவதாகவும் சொன்னார்கள். நான்தான் நடிக்க மறுத்து விட்டேன்.

எந்திரனில்
இதேபோல் 'எந்திரன்' படத்திலும் வில்லனாக நடிப்பதற்கு அழைப்பு வந்தது. அந்த படத்திலும் நடிக்க மறுத்து விட்டேன். வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் 'மாஸ்' படத்திலும் வில்லனாக நடிக்க என்னை அழைத்தார்கள். மறுத்து விட்டேன். சாஹித்கபூர் கதாநாயகனாக நடிக்க, பிரபுதேவா டைரக்டு செய்யும் இந்தி படத்திலும் வில்லனாக நடிக்கும்படி கேட்டார்கள். மறுத்து விட்டேன்.

எஸ்.ஜே.சூர்யா
20 வருடங்களுக்குப்பின், எஸ்.ஜே.சூர்யா இயக்கும் 'இசை' படத்தில் வில்லனாக நடிக்கிறேன். 'சிவாஜி' படத்துக்காக எனக்கு பேசப்பட்ட சம்பளத்தில், பத்தில் ஒரு பங்கு சம்பளம் வாங்கிக்கொண்டு இந்த படத்தில் நடித்திருக்கிறேன். சம்பளமே கொடுக்காவிட்டால் கூட, 'இசை' படத்தில் நடித்திருப்பேன். அப்படி ஒரு கதையம்சமும், கதாபாத்திரமும் உள்ள படம் அது.

உலகிலேயே முதல்முறையாக
உலகிலேயே எந்த நடிகரும் நடித்திராத ஒரு வில்லன் கதாபாத்திரத்தில், நான் நடித்து இருக்கிறேன். அதற்காக பெருமைப்படுகிறேன். எஸ்.ஜே.சூர்யா, மிக திறமையான இயக்குநர். 'இசை' படம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தும்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











