தாத்தாவின் தோள் மீது ஒய்யார ஆட்டம்... பேரக்குழந்தைகளுடன் விளையாடும் சத்யராஜ் !
சென்னை : நடிகர் சத்யராஜ் தனது பேரக்குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படம் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஒப்பற்ற கலைஞராக வலம் வருபவர் சத்யராஜ்.
இவர் காமெடி, வில்லன், கதாநாயகன் என எந்த கதாபாத்திரம் கிடைத்தாலும் அதில் தனக்கென தனி முத்திரைப்பதிப்பார்.

வில்லனாக
கோவை மாவட்டத்தில் பிறந்த சத்யராஜ், தமிழ் திரையுலகுக்கு வில்லனாக தனது அறிமுகத்தை கொடுத்தார். பாரதிராஜா இயக்கிய கடலோரக் கவிதைகள் திரைப்படம் தான் இவருக்கு ஹீரோவுக்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

வரலாற்று சாதனை
இதையடுத்து, ரஜினிகாந்த், கமல்,பிரபு என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றார். சத்யராஜ் நடித்த பெரியார் திரைப்படமும் ஒன்பது ரூபாய் நோட்டு திரைப்படமும் வரலாற்று சாதனை படைத்த படங்களாக மாறின.

உலகத்தரத்திற்கு
இவர் நடித்த அம்மாவாசை கதாபாத்திரம் இன்று வரை பேசப்பட்டு வருகிறது. அதேபேல ராஜா ராணி திரைப்படத்தில் நயன்தாராவின் அப்பாவாக நடித்து அசத்தி இருப்பார். அதேபோல உலகமே வியந்து பாராட்டிய பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்து மிரட்டி தனது பெயரை உலகத் தரத்திற்கு கொண்டு சென்றார் சத்யராஜ்.

பேரக்குழந்தைகளுடன்
இந்த கொரோனா ஊரடங்கால் வீட்டில் பொழுதை கழித்து வரும் சத்யராஜ், தனது பேரக்குழந்தைகளான தீரன் மற்றும் சமரனை தனது தோளில் அமர வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டுகிறார். இருவரும் தாத்தாவுடன் தோளில் அட்டகாசமாக அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள். இந்த புகைப்படத்தை சிபிராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











