இந்தியில் அமீர்கான் செய்ததை தமிழில் சிவா செய்திருக்கிறார்: சத்யராஜ் பாராட்டு!
இந்தியில் அமீர்கான் செய்ததைப் போன்று தமிழில் சிவா செய்திருப்பதாக சத்யராஜ் பாராட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: இந்தியில் அமீர்கான் தாரே ஜமீன் பார் படத்தின் மூலம் செய்த விசயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார் என பாராட்டியுள்ளார் நடிகர் சத்யராஜ்.
நடிகர் சிவகார்த்திக்கேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் கனா. அருண்ராஜா காமராஜ் இயக்கிய இப்படம் பெண்கள் கிரிக்கெட்டை கதைக்களமாகக் கொண்டது.

திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய சத்யராஜ், "அந்த காலத்தில் தொடர்ச்சியாக 100 நாட்கள் வெற்றி விழா கொண்டாடிக் கொண்டே இருந்தோம். ஒரு கட்டத்தில் இந்த விழாக்கள் எங்களுக்கு சலித்தே விட்டது. இந்த கட்டத்தில் இப்படி ஒரு மகிழ்ச்சியான விழாவை பார்க்க எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது.
சிவகார்த்திகேயன் நட்பை பற்றி பேசியே ஆக வேண்டும். உதவி செய்யணுமே என்றோ கைமாறு எதிர்பார்த்தோ அவர் செய்யவில்லை. சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய ஹீரோ. அவருக்கு இருக்கும் மார்க்கெட்டுக்கு இந்த மாதிரி படத்தை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், நாயகியை மையப்படுத்திய ஒரு படத்தை தயாரித்து படத்தின் முதுகெலும்பாக இருந்து இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்.
இந்தியில் அமீர்கான் தாரே ஜமீன் பார் படத்தின் மூலம் செய்த விஷயத்தை சிவா இங்கு செய்திருக்கிறார்" என இவ்வாறு அவர் பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











