ஈழ விடுதலைக்கு உதவலன்னாலும், உபத்திரவம் பண்ணாதீங்கப்பா - சத்யராஜ்
சென்னை: ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் செய்யமால் இருந்தால் போதும் என நடிகர் சத்யராஜ் கேட்டுக்கொண்டார்.
சென்னை சத்யம் திரையரங்கில் நடந்த ராஜா ராணி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில் இப்படித் தெரிவித்தார்.
சத்யராஜ் மேலும் பேசுகையில், "மெட்ராஸ் கபே படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதில் ஈழ விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தி இருப்பதாக கேள்விபட்டேன். படத்தைப் பார்த்த நமது உணர்வாளர்களும் தலைவர்களும் படம் தமிழருக்கு எதிரானதாக இருப்பதாகக் கூறியுள்ளனர்.

விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தாமல் இருந்தால் போதும்.
ஒருவேளை உண்மையாகவே ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியிருந்தால் அது மிகப் பெரிய தவறு.
தமிழீழப் போராட்டத்துக்கு யாரும் உதவி செய்யாவிட்டாலும் கூட பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதுங்க," என்றார்.



Click it and Unblock the Notifications











