கட்டப்பாவுக்கு தனி பிசினஸ்... தெலுங்கில் 'எமர்ஜென்சி' ஆகிறது சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும்
சென்னை: நடிகர் சத்யராஜின், தீர்ப்புகள் விற்கப்படும் படம் தெலுங்கில் எமர்ஜென்சி என்ற பெயரில் வெளியாகிறது.
நடிகர் சத்யராஜ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹீரோவாக நடித்துள்ள படம், திர்ப்புகள் விற்கப்படும். தீரன் இயக்கியுள்ளார். ஸ்ம்ருதி வெங்கட், ஹரிஷ் உத்தமன், சார்லி, ஜார்ஜ் மரியான் உட்பட பலர் நடித்துள்ளனர்.
சஞ்சீவ் மிராசாஹிப் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பிரசாத் இசை அமைத்துள்ளார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகின்றன.

தொடர்ந்து 12 மணி நேரம்
இந்தப் படத்தின் டப்பிங்கை, தொடர்ந்து 12 மணி நேரம் பேசி முடித்துள்ளார் சத்யராஜ். இந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியிட்டார்.

தெலுங்கில் ரிலீஸ்
இதற்கிடையே இந்தப் படம் தெலுங்கிலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. பாகுபலி படத்துக்குப் பிறகு தெலுங்கில் பிசியாக நடித்துவருகிறார் சத்யராஜ். அங்கு அவருக்கு தனி மார்க்கெட் இருப்பதால், இந்தப் படத்தை அங்கு டப் செய்து வெளியிட உள்ளனர்.

எமர்ஜென்சி
அதற்கான வேலைகள் நடந்துவருகின்றன. தெலுங்கில் இந்தப் படத்தின் டைட்டில் எமர்ஜென்சி என்று வைக்கப்பட்டுள்ளது. இது உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் படம் என்று கூறப்படுகிறது.

மருத்துவர்
சத்யராஜ் மருத்துவராக நடிக்கிறார். அவர் மகளாக ஸ்ம்ருதி வெங்கட் நடிக்கிறார். அரசியல் செல்வாக்குள்ள தொழில் அதிபராக மதுசூதன் நடிக்கிறார். மகளுக்காகத் தந்தை பழிவாங்கும் கதை என்று கூறப்படுகிறது.
இரட்டையர்களில் ஒன்றை இழந்தோம்.. உயிருக்கு போராடும் இன்னொரு குழந்தையை காப்பாற்றுங்கள் ப்ளீஸ்


Click it and Unblock the Notifications











