அடேங்கப்பா.. ஏகப்பட்ட ஏக்கர் இருக்கும் போல.. குன்னூரில் சத்யராஜின் பங்களாவை பார்த்து இருக்கீங்களா?
சென்னை: வில்லனாக நடித்து, ஹீரோவாக அறிமுகமாகி, குணசித்ர வேடத்தில் இப்பவும் டாப் பர்ஃபார்மராக அசத்தி வருகிறார் நடிகர் சத்யராஜ்.
சமீபத்தில் வெளியான வீட்ல விசேஷம் படத்தில் அவர் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் மூலம் மீண்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வைப்ரேஷனை கொடுக்கப்போகும் சத்யராஜுக்கு குன்னூர் எஸ்டேட்டில் மிகப்பெரிய பங்களா ஒன்று உள்ளது.

சத்யராஜ்
கமல்ஹாசனின் சட்டம் என் கையில் படத்தின் மூலம் 1978ம் ஆண்டு சினிமாவில் நடிக்க வந்தவர் சத்யராஜ். கமல், ரஜினி உள்ளிட்ட பலருக்கு வில்லனாக நடித்து மிரட்டிய சத்யராஜ் அதன் பின்னர் ஹீரோவாக கடலோர கவிதைகள் படத்தில் கலக்கி இருந்தார். அதன் பின்னர் பல படங்களில் ஹீரோவாக நடித்த சத்யராஜுக்கு வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத் தந்தன.

கட்டப்பா
வில்லன், ஹீரோவை தொடர்ந்து தற்போது குணசித்ர கதாபாத்திரங்களில் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்து வருகிறார். ஷங்கரின் நண்பன் படத்தில் பிரின்சிபாலாகவும் ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா படுகோனுக்கு அப்பாவாகவும் நடித்த சத்யராஜ், பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்து சர்வதேச அளவில் பிரபலமானார்.

எம்ஜிஆர் ரசிகர்
பாக்கியராஜை போலவே நடிகர் சத்யராஜும் தீவிர எம்ஜிஆர் ரசிகர் என்பது தெரிந்த ஒன்று தான். எம்ஜிஆரை போல இன்னமும் கட்டுமஸ்த்தான உடல் அமைப்புக்கு தொடர்ந்து பாடி பில்டிங் வொர்க்கவுட்களை செய்து வருகிறார். சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்த மாயோன் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யராஜின் மகள் திவ்யா சினிமாவுக்கு வராமல் வேறு வேலைகளில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.

குன்னூரில் பங்களா
நடிகர் சத்யராஜுக்கு குன்னூரில் உள்ள எஸ்டேட்டில் மிகப்பெரிய பங்களா ஒன்று இருக்கிறது. அதன் புகைப்படத்தை சமீபத்தில் சத்யராஜின் மகள் திவ்யா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நிலையில், அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. கோடை விடுமுறை வந்து விட்டாலே இந்த இடம் தான் தனக்கு சொர்க்கம் என்றும், கொஞ்சம் காசிப்ஸ், கொஞ்சம் ரெட் ஒயின் என பொழுதை கழிப்பேன் என திவ்யா போஸ்ட் போட்டுள்ளார்.
Recommended Video

மீண்டும் சிவகார்த்திகேயன் உடன்
இந்த ஆண்டு பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் கைரேகை நிபுணராக நடித்திருந்தார் சத்யராஜ். அதன் பின்னர் சமீபத்தில் வெளியான ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்தில் அவருக்கு அப்பாவாக அசத்தி இருந்தார். அடுத்ததாக வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ள பிரின்ஸ் படத்திலும் சத்யராஜுக்கு முக்கிய வேடம். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன் உடன் ரகளை செய்த நிலையில், மீண்டும் இவர்கள் இருவரின் காம்போ ரசிகர்களை எப்படி சிரிக்க வைக்கப் போகுது என பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











